வரலாற்றில் முதல்முறையாக மிஸஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்தியா...யார் இந்த ஷெர்ரி சிங்?
Mrs Universe 2025 : 48 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் மிஸஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்

பிலிபைன்ஸ் நாட்டில் நடந்த 2025 ஆம் ஆண்டு மிஸ்ஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷெர்ரி சிங் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்த அழகு போட்டியின் 48 ஆண்டுகால வரலாற்றில் இந்திய பெண் கிரீடத்தை சூடுவது இதுவே முதல் முறை.
மிஸஸ் யுனிவர்ஸ் 2025
2025 ஆம் ஆண்டின் சர்வதேச மிஸஸ் யுனிவர்ஸ் அழகு போட்டி பிலைபைன்ஸ் நாட்டில் மனிலாவில் உள்ள ஒகடாவில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 120 நாட்டைச் சேர்ந்த பெண்கள் இந்த அழகு போட்டியில் பங்கேற்றனர். Mrs. Universe போட்டி உலகம் முழுவதும் திருமணமான பெண்களின் அழகு, அறிவு, நம்பிக்கை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து மதிப்பீடு செய்யும் நிகழ்வாகும். இந்தியா , பிலிப்பீன்ஸ், ரஷ்யா ,தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா (USA), யுனைடெட் கிங்டம் (UK), ஸ்பெயின், பிரான்ஸ், மெக்சிகோ, தாய்லாந்து, ஜப்பான், பிரேசில், இண்டோனேஷியா, ஆஸ்திரேலியா, சென்ட் பீட்டர்ஸ்பர்க் (Russia’s representative region), மலேசியா, வியட்நாம், கனடா, நைஜீரியா ,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திருமணமான பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இதில் இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷெர்ரி சிங் மிஸஸ் யுனிவர்ஸ் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 1வது ரன்னர்-அப் சென்ட் பீட்டர்ஸ்பர்கை சேர்ந்தவர் , 2வது ரன்னர்-அப் வென்றவர் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், 3வது ரன்னர்-அப் ஆசியாவை சேர்ந்தவர், 4வது ரன்னர்-அப் வென்றவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்
View this post on Instagram
யார் இந்த ஷெர்ரி சிங் ?
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷெர்ரி சிங் . இவருக்கு ஒரு மகன் உள்ளார். இதற்கு முன்பாக 2025 ஆம் ஆண்டின் மிஸஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றார். 2024 ஆம் ஆண்டு மிஸஸ் பாரத் யுனிவர்ஸ் அழகு போட்டியில் பங்கேற்றார். தற்போது மிஸஸ் யுனிவர்ஸ் அழகு போட்டியின் 48 ஆண்டு வரலாற்றில் மிஸஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை சூடிய முதல் இந்திய பெண்ணாக சாதனை படைத்துள்ளார்.
ஷெர்ரி சிங் ஒரு தாயும் முன்னாள் விளையாட்டு வீராங்கனையும் ஆவார். தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் தங்களை மதிக்கவும், சமூகத்தில் தங்கள் இடத்தை நிலைநாட்டவும் ஊக்குவித்து வருகிறார். போட்டியின் இறுதிச்சுற்றில் அவர் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை, பெண்கள் அதிகாரம் மற்றும் மனநலத்தின் அவசியம் பற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. “இந்த வெற்றி எனதொன்று மட்டுமல்ல, எல்லா கனவுகளும் கொண்ட பெண்களுடையது,” என அவர் கூறிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றது.





















