மேலும் அறிய

Most Viewed Teaser: தனுஷிடம் வாங்கிய அடி.. விஜய்க்கு லியோ டீசர் மூலம் மீண்டும் முதலிடம் கிடைக்குமா?

தமிழ் திரையுலகில் எந்த திரைப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் அதிக பார்வையை பெற்றுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

தமிழ் திரையுலகில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையை பெற்றுள்ள படங்களின் எண்ணிக்கையில், விஜய் முதலிடத்தில் உள்ளார்.

சோசியல் மீடியா வார்:

தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்களின் ரசிகர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வருவது என்பது பல காலங்களாகவே நிலவுவது. திரையரங்க வளாகங்களில் சண்டையிடுவது தொடங்கி, யார் படங்கள் அதிகம் வசூல் செய்து வருகிறது என்பது வரை மோதிக்கொண்ட காலங்கள் எல்லாம் மலையேறி விட்டது. இன்றைய தேதியில் ரசிகர்களின் மோதல் எல்லாம் சமூக வலைதளங்களில் தான் நிகழ்ந்து வருகிறது. எந்த நடிகரின் படங்களின் டீசர், டிரெய்லர் அதிக வியூஸ், லைக்ஸ் பெறுகிறது. யாருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகளவில் ஷேர் மற்றும் ரி-டிவீட் செய்யப்படுகிறது என்பதை கணக்கில் கொண்டு தான் சமூகவலைதளங்களில் பெரும் போரே நடந்து வருகிறது.

யாருக்கு அதிக பலம்?

எந்த நடிகருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது கூட இந்த லைக், ஷேர், வியூஸ் மற்றும் ரிடிவீட்டை கொண்டு தான் கணிக்கப்படுகின்றன. இதற்காகவே 24 மணி நேரத்தில் யாருடைய டீசர் மற்றும் டிரெய்லர்கள் அதிக வியூஸ் பெறுகின்றன என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் பெரும்பாலான நேரங்களில் விஜயின் படங்கள் புதுப்புது சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், அவரது சாதனையை தனுஷின் கேப்டன் மில்லர் படம் தகர்த்து முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து, தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக வியூஸ் பெற்ற டீசர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

01. கேப்டன் மில்லர்:

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். கடந்த மாதம் வெளியான இப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 2.31 கோடி வியூஸ்களை பெற்றுள்ளது. இதன் மூலம், தமிழ் சினிமாவில் வெளியான 24 மணி நேரத்தில் அதிக வியூஸ் பெற்ற டீசராக கேப்டன் மில்லர் படத்தின் டீசர் உருவாகியுள்ளது. இதன் மூலம், இந்த சாதனையில் முதலிடத்தில் இருந்த விஜயை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

02. மாஸ்டர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தின் டிசர், வெளியான 24 மணி நேரத்தில் 2 கோடி வியூஸ்களை பெற்றது. இந்த சாதனையை தான் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் டிசர் முறியடித்துள்ளது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்ற டீசரின் பட்டியலில், 1.49 கோடி வியூஸ்களுடன் விஜயின் சர்கார் மூன்றாவது இடத்திலும், 1.12 கோடி வியூஸ்களுடன் விஜயின் மெர்சல் நான்காவது இடத்திலும், 94 லட்சம் வியூஸ்களுடன் ரஜினியின் 2.0 ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

சாதனை படைக்குமா லியோ?

இந்நிலையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சாதனையை தகர்த்து, அதிக வியூஸ் பெற்ற டீசர் என்ற சாதனையை விஜயின் லியோ படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடயே, 24 மணி நேரத்தில் அதிக வியூஸ் பெற்ற தமிழ் திரையுலகின்  டிரெய்லர் பட்டியலில்,  விஜயின் பீஸ்ட் திரைப்பட டிரெய்லர் சுமார் 3 கோடி வியூஸ்களுடன் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Embed widget