Money Heist 5 Trailer: மணிஹீஸ்ட் சீசன் 5 டிரெய்லர் வெளியானது
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெப் சீரியஸ் 'மணி ஹீஸ்ட்' விரைவில் அதன் இறுதி சீசனுடன் திரும்புகிறது. இந்த ஸ்பானிஷ் ஹீஸ்ட் தொடரின் 5 வது சீசன் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மணி ஹீஸ்ட் சீசன் 5 டிரெய்லர் இன்று வெளியானது.
மணி ஹீஸ்ட் சீசன் 5 டிரெய்லர் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த வாரம் நெட்ஃபிளிக்ஸ் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், 'மணி ஹீஸ்ட் 5' தயாரிப்பாளர்கள் அலிசியாவின் கைகளில் இருந்து தப்பிக்க தி பேராசிரியர் போராடுவதைக் காணக்கூடிய தொடரின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
View this post on Instagram
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெப் சீரியஸ் 'மணி ஹீஸ்ட்' விரைவில் அதன் இறுதி சீசனுடன் திரும்புகிறது. இந்த ஸ்பானிஷ் ஹீஸ்ட் தொடரின் 5 வது சீசன் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும். முதல் பாகம் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்ல் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்படும், இரண்டாவது பாகம் டிசம்பர் 3 ஆம் தேதி திரையிடப்படும்.
SAKTHI VAASU | ''என் சினிமா வாழ்க்கையை பிக் பாஸ் சீரழித்துவிட்டது''- பிரபல நடிகர் சக்தி வாசு வேதனை !
இந்த பிரபலமான வெப் சீரியஸில் தி பேராசிரியர் அல்லது செர்ஜியோ மார்க்வினா கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்வாரோ மோர்டே, ட்ரெய்லரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் 'லா காசா டி பேப்பலின்' ஒரு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். அங்கு தி பேராசிரியர் இல்லாமல் முழு குழுவையும் காணலாம். இது செர்ஜியோ அலிசியாவின் கைகளில் இருந்து தப்பிக்க முடியுமா அல்லது இது அவருக்கு 'முடிவு' என்பது பற்றிய ஒரு புதிய சஸ்பென்ஸை உருவாக்குகிறது.
ஓடிடி இயங்குதளமான நெட்பிளிக்ஸ்ல் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலேயம் அல்லாத வெப் தொடர்களில் ஒன்றாக ‘மணி ஹீஸ்ட்’ உருவெடுத்துள்ளது. இதில், அல்வாரோ மோர்டே (தி பேராசிரியர்), அர்சுலா கோர்பெர் (டோக்கியோ), இட்ஜியர் இட்யூனோ (ராகுல் முரில்லோ/லிஸ்பன்), பெட்ரோ அலோன்சோ (பெர்லின்), ஆல்பா ஃப்ளோரஸ் (நைரோபி), மிகுவல் ஹெரான் (ரியோ), ஜெய்ம் லோரன்டே (ரியோ) டென்வர்), எஸ்தர் அசெபோ (மெனிகா காஸ்டாம்பைட்/ஸ்டாக்ஹோம்), என்ரிக் ஆர்ஸ் (ஆர்டுரோ), டார்கோ பெரிக் (ஹெல்சின்கி), நஜ்வா நிம்ரி (இன்ஸ்பெக்டர் சியரா) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
டிரெய்லரை இங்கே பாருங்கள்:
‛ஜெய் பீம்’ உருவான வரலாறு... சூர்யா கையில் எடுக்கும் அம்பேத்கரிசம்!