SAKTHI VAASU | ''என் சினிமா வாழ்க்கையை பிக் பாஸ் சீரழித்துவிட்டது''- பிரபல நடிகர் சக்தி வாசு வேதனை !
”நிறைய பேர் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் பங்கேற்றேன் ஆனால் அது எனக்கே நிறைய மன அழுத்தத்தை கொடுத்துவிட்டது “
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பி.வாசு. இவரின் மகன் சக்தி , வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமானார். குறிப்பிட்ட சில படங்களில் நடித்து வந்த சக்திக்கு எதிர்பார்த்த படங்கள் கிடைக்கவில்லை. அதன்பிறகு விஜய் டிவியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் ஓவியாவிற்கும் சக்திக்கும் இடையிலான பிரச்சனையில் பலரும் இவரை’ ட்ரிக்கர் சக்தி‘ என அழைத்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் அதற்கு பிறகு சினிமாத்துறையில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற எண்ணம் பல பிரபலங்களுக்கு உண்டு. ஆனால் சக்தி பிக்பாஸ் தனது வாழ்க்கையை சீரழித்து விட்டது என வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் தனது வாழ்க்கையில் 70 சதவிகிதம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியாக தெரிவித்துள்ளார். பிக்பாஸில் பங்கேற்ற பிறகு நிறைய தனிப்பட்ட பிரச்னைகள் மற்றும் குடும்ப பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும் கூறிய சக்தி, ”பிக்பாஸ் எனது சினிமா வாழ்க்கையை மோசமாக பாதித்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.மேலும் பிக்பாஸ் “எடிட் செய்த பிறகு ஸ்கிரிப்ட் செய்யும் ஒரு நிகழ்ச்சி , அதில் யாரை வேண்டுமானாலும் நல்லவர்களாக காட்டலாம், யாரை வேண்டுமானாலும் கெட்டவர்களாக காட்டலாம்” என வெளிப்படையாக பேசிய சக்தி, ”பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் பங்கேற்றிருக்க கூடாது என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தேன், நிறைய பேர் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் பங்கேற்றேன் ஆனால் அது எனக்கே நிறைய மன அழுத்தத்தை கொடுத்துவிட்டது “ என வேதையுடன் தெரிவித்துள்ளார்,
ஆரம்ப காலக்கட்டத்தில் நிறைய படங்களை தவற விட்டதாக தெரிவிக்கிறார் சக்தி. கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் தான் நடிக்காமல் நிராகரித்ததாகவும், பின் நாட்களில் அந்த படங்கள் வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டதாம். நான் நடித்த சில படங்களின் கதைகள் கேட்க நன்றாக இருந்தது ஆனால் முறையாக எடுக்கப்படவில்லை. சில படங்களின் கதைகள் நன்றாக இல்லை என நிராகரித்திருக்கிறேன். ஆனால் அவை சிறந்த படங்களாக இருந்திருக்கிறன என தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதிதான் தனக்கு பிடித்த நடிகர் என்றும் அவரை போல வெர்சட்டைல் நடிகராக மாற வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் கூறுகிறார்.அதற்கு முன்னதாக எனது உடல் எடையை குறைப்பதில் நான் கவனம் செலுத்த வேண்டும் மன அழுத்தம் காரணமாக நான் அதில் கவனம் செலுத்தவில்லையாம் . சக்தி விரைவில் முன்னணி நடிகர் ஒருவருக்கு வில்லனாக களமிறங்க உள்ளார். அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர நளினமான ஒரு ஆண்டி-ஹீரோ கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ”நீங்க திறமையான நடிகர் நிச்சயமாக நல்ல கம் பேக் கொடுங்க” என ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.