HBD Gautham Karthik: 'உன்னை ஒருபோதும் விழ விடமாட்டேன்' .. கௌதம் கார்த்திக் பிறந்தநாளை ஸ்பெஷலாக்கிய மஞ்சிமா..
நடிகர் கௌதம் கார்த்திக் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவியும், நடிகையுமான மஞ்சிமா மோகன் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
![HBD Gautham Karthik: 'உன்னை ஒருபோதும் விழ விடமாட்டேன்' .. கௌதம் கார்த்திக் பிறந்தநாளை ஸ்பெஷலாக்கிய மஞ்சிமா.. manjima mohan said birthday greeting to her beloved husband gautham karthik HBD Gautham Karthik: 'உன்னை ஒருபோதும் விழ விடமாட்டேன்' .. கௌதம் கார்த்திக் பிறந்தநாளை ஸ்பெஷலாக்கிய மஞ்சிமா..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/12/778f594a3d67af099149631d7dd807d21694493511234572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் கௌதம் கார்த்திக் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவியும், நடிகையுமான மஞ்சிமா மோகன் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இளம் நட்சத்திர ஜோடி
தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனும், நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற பெயரோடு, இளம் நடிகராக வலம் வருபவர் ‘கௌதம் கார்த்திக்’. மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்த அவர் நடிப்பில் கடைசியாக ஏப்ரல் மாதம் “August 16 1947” என்ற படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கிரிமினல் என்ற படத்தில் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார்.
இப்படியான நிலையில், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் இணைந்து நடித்தனர். அந்த படத்தின் கெமிஸ்ட்ரி அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் கரம் கோர்க்க காரணமாக அமைந்தது. அந்த படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி காதலிப்பதாக தங்கள் இன்ஸ்டாகிராம் அறிவித்தனர். தொடர்ந்து நவம்பர் 28 ஆம் தேதி குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகினர் புடைசூழ திருமணம் செய்து கொண்டனர்.
ரசிகர்களை கவர்ந்த தம்பதி
திருமணத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் தம்பதியினர் தாங்கள் இருவரும் தங்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்று தெரிவித்தனர். இதனைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போயினர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திருமணத்திற்கு பிறகு வரும் கௌதம் கார்த்திக்கின் முதல் பிறந்தநாள் என்பதால் மஞ்சிமா மோகன் என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
Happy birthday, partner! ❤️
— Manjima Mohan (@mohan_manjima) September 12, 2023
You are my pillar of strength, my confidant, my soulmate, my twin flame, and so on and so forth!!
I ll be right beside you on this journey, holding your hand tight and never letting you fall, I promise!🫶 pic.twitter.com/l9UIRrrMgC
இந்த நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கௌதம் கார்த்திக் கைகளை கோர்த்தபடி மஞ்சிமா மோகன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர். நீ என் வலிமையின் தூண், என் நம்பிக்கைக்குரியவன், என் ஆத்ம தோழன், என் இரட்டைச் சுடர், மற்றும் பல!! இந்த வாழ்க்கை பயணத்தில் நான் உன் அருகிலேயே இருப்பேன், உன் கையை இறுகப் பிடித்துக்கொண்டு உன்னை ஒருபோதும் விழ விடமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்!” என காதல் உணர்வு உருக உருக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Ethirneechal September 11 : ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்த கடைசி எபிசோட் இதுதானா? எதிர்நீச்சல் அப்டேட் இதோ..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)