மேலும் அறிய

Ethirneechal September 11 : ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்த கடைசி எபிசோட் இதுதானா? எதிர்நீச்சல் அப்டேட் இதோ..

Ethir neechal September 11 episode : *ஆதிகுணசேகரனை ஏமாற்றி நைசாக எஸ்கேப்பான நந்தினி* வசமாக மாட்டிக்கொண்ட விசாலாட்சி அம்மா எப்படி தப்பிச்சாங்க?எதிர் நீச்சல் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி சமையல் செய்து வைத்து தயாராக காத்திருக்க ஜனனி வண்டியோடு வந்ததும் அனைத்தையும் வண்டியில் ஏற்ற தயாராகிறார்கள். நந்தினி நான் ஒரு முறை ஹாலில் யாராவது இருக்கிறார்களா என பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்லி எட்டிப்பார்க்க கரிகாலன் மாடியில் இருந்து இறங்கி வந்துகொண்டு இருக்கிறான். அதே நேரத்தில் விசாலாட்சி அம்மாவும் வர கரிகாலன் அவரிடத்தில்  "கிச்சனுக்கா போறீங்க? பரண்  மேல இருந்து அண்டா குண்டா எல்லாம் எடுத்து வைச்சு இருக்காங்க. ஆனா தூசியே இல்லாம வாசனையா இருக்கு என சொல்ல.. என்னடா உளற நான் போய் பார்த்துட்டு வருகிறேன்" என சொல்லி விசாலாட்சி அம்மா கிச்சனுக்கு போகிறார்.


Ethirneechal September 11 : ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்த கடைசி எபிசோட் இதுதானா? எதிர்நீச்சல் அப்டேட் இதோ..

அங்கே போய் பெரிய பெரிய பாத்திரங்களில் சேமித்து வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி "என்னடி பண்ணறீங்க?" என கேட்கிறார். நந்தினி தயக்கத்துடன் தான் தொழில் தொடங்கியுள்ளதை பற்றி சொல்லி விசாலாட்சி அம்மாவுக்கு ஷாக் கொடுக்கிறாள். "நீங்க தான் அத்தை எங்களுக்கு சப்போர்ட்டா இருக்கணும். அப்படியே நாங்க அத புடிச்சுக்கிட்டு மேலே வந்துருவோம். ஜனனிக்கும் சக்திக்கும் சப்போர்ட் பண்ணற மாதிரி எங்களுக்கு பண்ணுங்க அத்தை" என்கிறாள் நந்தினி.

"அவங்க எல்லாருக்கும் முன்னாடி சொல்லி செய்றாங்க உன்ன மாதிரி திருட்டுத்தனம் செய்யல" என விசாலாட்சி அம்மா சொல்ல "ப்ளீஸ் அத்தை அந்த கரிகாலனை கொஞ்சம் அந்த பக்கம் கூட்டிட்டுப்போனா, நாங்க இப்படியே இதை எடுத்துட்டு போயிடுவோம்" என்கிறாள். "இந்த விஷயம் மட்டும் பெரியவனுக்கும் உன்னோட புருஷனுக்கும் தெரிஞ்சுது அவ்வளவுதான். என்னால முடியாது" என சொல்லி வெளியே சென்று கரிகாலனை ஹனிமூன் பத்தி பேசலாம் வா என மாடிக்கு அழைத்து சென்று விடுகிறார்.

அத்தை மறைமுகமாக சப்போர்ட் செய்ததை நினைத்து சந்தோஷமாக வண்டியில் பாத்திரங்களை ஏத்துகிறார்கள். அந்த நேரம் பார்த்து குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் காரில் வந்து இறங்க இவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள்.

Ethirneechal September 11 : ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்த கடைசி எபிசோட் இதுதானா? எதிர்நீச்சல் அப்டேட் இதோ..

"என்ன இதயெல்லாம்? எங்க சமைத்து சோறு எடுத்துட்டு போறீங்க? " என குணசேகரன் மிரட்ட "கோயிலுக்கு அன்னதானம் செய்ய எடுத்துட்டு போறோம். அத்தைதான் காட்டு கோயிலுக்கு வேண்டி இருந்தாங்களாம். அவங்க தான் குடுத்துட்டு வர சொன்னாங்க" என எதை எதையோ சொல்லி சமாளிக்கிறாள் நந்தினி. "பொய் சொல்லாத நந்தினி. உன்னோட கண்ணுல உண்மையில்ல" என்கிறார் குணசேகரன். "ஐயோ மாமா அன்னதானத்துக்கு லேட் ஆகுது" என நந்தினி சொல்ல "போய் தொலைங்க" என சொல்லி அனுப்பி விடுகிறார் குணசேகரன். அடுத்த நொடியே அவர்கள் காரில் பறந்து விடுகிறார்கள்.

ரேணுகாவும் ஈஸ்வரியும் எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது  போல ஓரமாக நிற்கிறார்கள். உள்ளே சென்ற குணசேகரன் அம்மாவிடம் இதை பற்றி கேட்க சொல்கிறார். விசாலாட்சி அம்மா அங்கே வர "கோயிலுக்கு வேண்டுதல் செய்ய சொன்னியா?" என கதிர் கேட்க அவர் ஒண்ணுமே புரியாமல் முழிக்கிறார். நோண்டி நோண்டி கதிர் கேள்வி கேட்க விசாலாட்சி அம்மாவுக்கு குழப்பமாக இருக்கிறது. ரேணுகாவும் ஈஸ்வரியும் வெளியில் நின்று கொண்டே மாமியாருக்கு சைகை மூலம் "ஆமாம்" என சொல்லுங்கள் என சொல்கிறார்கள். அதை புரிந்து கொண்ட விசாலாட்சி அம்மா "ஆமா நான் தான் போக சொன்னேன். ஒரே ஞாபக மறதியா இருக்கு" என சொல்லி நைசாக அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

நேற்றைய எபிசோட்தான் குணசேகரனாக மாரிமுத்து நடித்த கடைசி எபிசோட் எனவும் ரசிகர்களால் விவாதிக்கப்படுகிறது. 

 மனதில் என்றென்றும் வாழ்வார் மாரிமுத்து

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
Karthigai Deepam: நின்று போன கும்பாபிஷேகம்.. கார்த்தியை ஒதுக்கி வைத்த கிராமம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நின்று போன கும்பாபிஷேகம்.. கார்த்தியை ஒதுக்கி வைத்த கிராமம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget