PS - 1 Ratchasa Maamaney: விடாத மணிரத்னம்.. மிரட்டி எடுக்கும் கார்த்தி.. ‘ராட்சஸ மாமனே' பாடல் மேக்கிங்!
பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ராட்சஸ மாமனே’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
![PS - 1 Ratchasa Maamaney: விடாத மணிரத்னம்.. மிரட்டி எடுக்கும் கார்த்தி.. ‘ராட்சஸ மாமனே' பாடல் மேக்கிங்! Mani Ratnam AR Rahman Madras Talkies PS - 1 Ratchasa Maamaney BTS Video Out PS - 1 Ratchasa Maamaney: விடாத மணிரத்னம்.. மிரட்டி எடுக்கும் கார்த்தி.. ‘ராட்சஸ மாமனே' பாடல் மேக்கிங்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/19/f234c3968a8c43304fd186304e6d14761663568899126175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ராட்சஸ மாமனே’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
‘ராட்சஸ மாமனே’ பாடலில் மேக்கிங் வீடியோவில் பேசிய பிருந்தா பாடலின் நடனம் பரதநாட்டியம் மற்றும் கதக் ஆகியவற்றைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆடும் டான்சர்கள் மட்டுமல்லாது உண்மையான பரதநாட்டிய கலைஞர்களையும் இந்தப்பாட்டில் ஆட வைத்திருக்கிறோம்.
கார்த்தி பேசும் போது, ‘அந்தப்பாடலின் போது பிருந்தா மாஸ்டரிடம் பாடலின் நடனத்தை பிட்டு பிட்டாக எடுங்கள் என்றேன். அவரும் ஓகே என்றார். ஆனால் திடீரென அங்கு வந்த மணி சார் ‘ஐ வாண்ட் ஏ சிங்கிள் ஷாட்’ என்று சொல்லிவிட்டார். நான் அப்படியே பிருந்தா மாஸ்டரை பார்த்தேன். அவர் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். முடித்துவிட்டு நான் மணி சாரிடம் சொன்னேன். குழந்தைகளோடு இந்த மாதிரியான ஒன்றை கற்பனை செய்து பார்க்க முடியுமா என்று.. பள்ளி ஆண்டு விழாக்களில் இந்தப்பாடல் அடிக்கடி இடம் பெறும் நான் நம்புகிறேன்” என்றார்.
கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில், அதனைத்தொடர்ந்து 'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.
View this post on Instagram
இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘சோழா சோழா’ பாடல் வெளியிடப்பட்டது.= அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் பேசிய ரஜினி தான் இந்தப்படத்தில் பெரிய பழுவேட்டையர் கதபாத்திரம் செய்ய ஆசைப்பட்டதாகவும், ஆனால் மணிரத்னம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் பேசியிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)