Turbo Box Office: நெகட்டிவ் விமர்சனங்கள் பாசிட்டிவ் வசூல்.. மம்மூட்டியின் டர்போ பட பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!
Turbo Box Office: மம்மூட்டி நடிப்பில் கடந்த மே 23ஆம் தேதி திரையரங்கில் வெளியான டர்போ படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்.
டர்போ
மம்மூட்டி நடித்து கடந்த மே 23ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் டர்போ (Turbo). வைசாக் இப்படத்தை இயக்கியுள்ளார். ராஜ் பி ஷெட்டி, அஞ்சனா பிரகாஷ், சுனில் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான டர்போ படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த மம்மூட்டி இந்த ஆண்டும் பிரமயுகம் படத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
இதனை அடுத்து தற்போது வெளியாகியுள்ள டர்போ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பைத் தவிர பாராட்டும் விதமாக எதுவும் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இப்படியான நிலையில் டர்போ படத்தின் முதல் இரண்டு நாட்களின் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
முதல் நாள் வசூல்
Worldwide Box Office Rampage By Josettayi 👊👊🔥#Turbo grossed 17.3 crores worldwide on Day 1! 🎉 Such a humongous opening across the globe, thanks to our incredible audience for the endless love & support 🙏❤️🤗#Mammootty #MammoottyKampany #TurboMovie @mammukka pic.twitter.com/gNFRbyujnb
— MammoottyKampany (@MKampanyOffl) May 24, 2024
டர்போ படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.17. 3 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. இந்திய அளவில் டர்போ படம் 6.25 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டு நாள் வசூல்
Josettayi is Unstoppable 🔥👊🏻
— MammoottyKampany (@MKampanyOffl) May 24, 2024
156 Late Night Extra Shows Across Kerala 👊🏻#Mammootty #MammoottyKampany #TurboMovie @mammukka @TurboTheFilm pic.twitter.com/69mjSnuw29
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கேரளாவில் மம்மூட்டி ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள். முதல் நாளைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் திரையரங்குகளில் 156 காட்சிகள் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளன. சாக்னிக் தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி இரண்டாவது நாளாக டர்போ படம் ரூ. 3.5 கோடி வசூலித்துள்ளது. இவை இந்திய அளவில் ஆன்லைன் டிக்கெட் விற்பனைகளை அடிப்படையாக வைத்து வெளியான தகவல்கள் மட்டுமே. படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். அடுத்து வரக் கூடிய இரண்டு நாட்களில் டர்போ படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கலாம்.