Malayalam Actress Lijomol jose | சூர்யா பட நடிகை திடீர் திருமணம்.. வாழ்த்திய திரையுலகத்தினர்!
தனது நீண்டகால நண்பரான அருண் என்பவரை நேற்று கேரளாவின் வயநாட்டில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் தனது நண்பரை திடீர் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து மலையாளத் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மகேஷிண்டே பிரதிகாரம், ஸ்ட்ரீட் லைட்ஸ், ப்ரேம சூத்ரம் உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்தவர் நடிகை லிஜோமோல் ஜோஸ், இவர் தமிழில் சசி இயக்கத்தில் நடிகர் சித்தார்த்துடன் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்துள்ளார். மேலும் தீதும் நன்றும் என்கிற படத்தில் நடித்த இவர் தற்போது நடிகர் சூர்யாவுடன் ஜெய் பீம் படத்திலும் நடித்து வருகிறார்.
View this post on Instagram
இவர் தனது நீண்டகால நண்பரான அருண் என்பவரை நேற்று கேரளாவின் வயநாட்டில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக, தா.சே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் அவரது 39வது படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அண்மையில் வெளியிடப்பட்டது. படத்துக்கு ‘ஜெய் பீம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. கதிர் படத்தின் ஒளிப்பதிவாளர், ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் ஆகியோர் நடித்துள்ளனர். இன்று நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது 39 திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
Excited to share the First Look of #JaiBhim #ஜெய்பீம்@prakashraaj @tjgnan @RSeanRoland @srkathiir @KKadhirr_artdir @philoedit @anbariv @rajisha_vijayan #Manikandan #LijoMolJose @joshikamaya @PoornimaRamasw1 @thanga18 @kabilanchelliah @proyuvraaj @rajsekarpandian @2D_ENTPVTLTD pic.twitter.com/acDoYuir2K
— Suriya Sivakumar (@Suriya_offl) July 23, 2021