மேலும் அறிய

Nadhiya: "கிஸ் பண்ணிடுவேன்" நதியாவை மிரட்டிய பிரபல மலையாள நடிகர் - எதற்கு தெரியுமா?

Actress Nadhiya : நடிகை நதியாவை கிஸ் பண்ணிவிடுவேன் என நடிகர் முகேஷ் மிரட்டியது என்ன காரணம் தெரியுமா? அவர்களே பகிர்ந்த கதை என்ன தெரியுமா? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஒரு சில நடிகைகள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நிலையான ஒரு இடத்தை பிடித்துவிடுவார்கள். எத்தனை எத்தனை காலங்கள் ஓடினாலும், எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும் ஒரு சிலர் மீது இருக்கும் கிரேஸ் மட்டும் எப்போதுமே அப்படியே பதிந்து விடும். அப்படி பட்ட ஒரு நடிகை தான் 80ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை தன் கைக்குள் அடக்கி வைத்திருந்த நடிகை நதியா. 

Nadhiya:

ரசிகர்களின் மனம் கவர்ந்த நதியா:

எளிமையான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதை வெகு சிறப்பாக நடிப்பதில் வித்தகி நடிகை நதியா. தமிழ் திரைப்படங்களை போலவே மலையாளத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பாசில் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே பக்கத்துக்கு வீட்டு பெண் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்திய நதியாவை தமிழ் திரை ரசிகர்கள் கொண்டாடினர். அன்று போலவே இன்றும் அதே இளமையுடன் அழகுடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நதியா. 

சமீபத்தில் நடிகை நதியா மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியை மலையாள நடிகர் முகேஷ் நடத்தி  வருகிறார். இன்றும் முகேஷ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் நடிகை நதியாவை பற்றின ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்றை நடிகர் முகேஷ் பகிர்ந்து இருந்தார். 

Nadhiya:

1986ம் ஆண்டு முகேஷ் மற்றும் நதியா இணைந்து நடித்த திரைப்படம் 'ஷாமா'. சிரிப்பு வராமல் ஜோக் அடிப்பதில் திறமையானவர் நடிகர் முகேஷ். ஷாமா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் முகேஷ் ஏராளமான ஜோக் அடிக்க நதியா அதை மிகவும் விரும்பி கேட்பாராம். அவரின் ரசிகையாகவே மாறி போன நதியா படப்பிடிப்பு செட்டுக்கு எப்போது வந்தாலும் முகேஷை தான் தேடுவாராம். இதை பார்த்த மற்றவர்களுக்கு பொறாமையாக இருக்குமாம். 

மிரட்டிய முகேஷ்:

ஒரு நாள் வழக்கம் போல முகேஷ் ஜோக் அடிக்க நதியா அவரை பார்த்து 'யூ ஆர் ஏ குட் ஜோக்கர்' என சொல்லி பயங்கரமாக சிரித்துள்ளார். அத்தனை நாட்களாக பொங்கிக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்களாம். அப்போதில் இருந்து நதியா முகேஷை பார்க்கும் போதெல்லாம் 'ஜோக்கர்' என்று சொல்லியே கேலி செய்துள்ளார் நதியா. இதனால் கடுப்பான முகேஷ் ஒரு நாள் நதியாவிடம் இன்னொரு முறை ஜோக்கர் என்று கூப்பிட்டால் கிஸ் பண்ணிவிடுவேன் என்று சொல்ல பயந்து போன நதியா அதற்கு பிறகு அவரை ஜோக்கர் என்ற அழைக்காமல் ஒதுங்கி கொண்டாராம். 

அதற்கு பிறகு நதியாவை பார்க்கும் போதெல்லாம் எங்க இப்ப கூப்பிடு என சொல்லி வெறுப்பேற்றியுள்ளார் முகேஷ். அவரை பார்த்தாலே வாயை கையால் பொத்திக்கொண்டு ஓடிவிடுவாராம் நதியா. அந்த படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு நதியா காரில் கிளம்பும் போது தலையை மட்டும் வெளியில் நீட்டி 'ஜோக்கர்' என முகேஷை பார்த்து கத்தி சொல்லி பழி தீர்த்துக்கொண்டாராம் நதியா. அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் முகேஷ் மற்றும் நதியா இருவரும் தங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். 
  
தலைப்பு செய்திகள்

பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Suriya 48 : ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...ஜோடியாகும் கயடு லோஹர்
Suriya 48 : ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா...ஜோடியாகும் கயடு லோஹர்
மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி
மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் சூர்யா! இஸ்லாமிய வெறுப்பை பரப்பிய கமல்! துவைத்து தொங்கவிட்ட லெனின் பாரதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Embed widget