Ajith - Vijay: துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் வந்த வினை..மோதிக் கொண்ட அஜித் -விஜய் ரசிகர்கள்
படம் அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் 6 மாதங்களாக எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது.
நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் மதுரையில் அஜித் - விஜய் ரசிகர்கள் போஸ்டர் மூலம் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Thunivu #NoGutsNoGlory#AK61FirstLook #AK61 #Ajithkumar #HVinoth
— Boney Kapoor (@BoneyKapoor) September 21, 2022
@ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @GhibranOfficial #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @SuthanVFX #CSethu #SameerPandit @anandkumarstill pic.twitter.com/Mb7o0fuGTT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது.
இனிமே Poster அடிக்கவே யோசிப்பானுங்க Opposite Army.#Thunivu pic.twitter.com/gx8HSpx41F#AK61 #Ajith #AjithKumar
— 😈ANIL😈VETTAIYAN🐿🐿🗡🗡 (@thalark1245) September 22, 2022
படம் அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் 6 மாதங்களாக எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது. அதன்படி இந்த படத்துக்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது. மாஸ் லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் முதல் போஸ்டரும், கிளாஸ்ஸான அஜித் மட்டுமே இருக்கும் செகண்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் தற்போது வரை இந்த 2 போஸ்டரும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
Sankranthi 2023 is going to be special with the arrival of #Vaarasudu #VaarasuduSecondLook#Vaarasudu#Varisu#HBDDearThalapathyVijay
— Sri Venkateswara Creations (@SVC_official) June 22, 2022
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/GySYHlT488
இதனிடையே துணிவு பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை கொண்டாடும் வகையில் மதுரையில் அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டினர். அதில், எங்களுக்கு எதிரியாக நினைக்காத..எங்களுக்கு துணிவு ஜாஸ்தி...மீறி நினைச்சா உங்க ‘வாரிசு’ - வையே அழிச்சிடுவோம் என தெரிவிக்கப்பட்டு விஜய் ரசிகர்களை வாண்டட் ஆக வம்பிழுத்தனர். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒட்டப்பட்டதாக சொல்லப்படும் விஜய் ரசிகர்களின் போஸ்டரில் துணிவாக இருந்தாலும் சரி...யாராக இருந்தாலும் சரி..ஃபர்ஸ்ட் தளபதி எண்ட்ரி தான் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த 2 போஸ்டர்களுக்கும் இணையத்தில் வைரலானது. இதனைக் கண்ட இணையவாசிகள் பலரும் காலம் போகிற போக்கில் எல்லாம் மாறிடுச்சி...ஆனால் இது மட்டும் மாறவே இல்ல.. என கவலை தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் படத்துக்கு “வாரிசு” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.