National Film Awards 2023 :கடைசி விவசாயி மணிகண்டன் முதல் மாதவன் வரை.. தேசிய விருது வென்ற தமிழ் திரைக்கலைஞர்கள்
கடைசி விவசாயி மணிகண்டன் முதல் ராக்கெட்ரி படம் மாதவன் வரை 69 ஆவது தேசிய விருது விழாவில் விருது வென்ற தமிழ் திரைக் கலைஞர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி 69-வது தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டன. 2021ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 28 மொழிகளில் வெளியான 280 படங்கள் இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழில் கடைசி விவசாயி, இரவின் நிழல், உள்ளிட்டப் படங்களுக்கு அந்தந்த பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன . இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் தலைமையின் கீழ் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருது அறிவிக்கப்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
கடைசி விவாசாயி
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. விஜய் சேதுபதி, விவசாயி நல்லாண்டி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தி நடித்திருந்தனர். சிறந்த தமிழ் படத்திற்கான விருதை கடைசி விவசாயி திரைப்படம் வென்றது. கூடுதலாக இந்தப் படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டி அவர்களுக்கு சிறப்பு பிரிவின் கீழ் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து இந்த இந்த விருதுகளை இயக்குநர் மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.
‘கடைசி விவசாயி' படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்பட தேசிய விருதை பெற்றார் மணிகண்டன் | #Manikandan#NationalFilmAwards #NationalFilmAwards2023 #KadaisiVivasayi #Manikandan #ssmusic pic.twitter.com/5eF1rGOvlU
— SS Music (@SSMusicTweet) October 17, 2023
இரவின் நிழலில்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழலில் திரைப்படத்தில் இடம்பெற்ற மாயவா தூயாவா பாடலுக்காக பாடகி ஷ்ரெயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
#WATCH | Singer Shreya Ghoshal receives the Best Female Playback Singer award for the song 'Mayava Chayava' from the film 'Iravin Nizhal', at the National Film Awards. pic.twitter.com/TAMQ5H0mty
— ANI (@ANI) October 17, 2023
மாதவன்
நடிகர் மாதவன் இயக்கி, நடித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். நடிகை சிம்ரன் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகர் மாதவன் மற்றும் ராக்கெட்ரி படத்தின் தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன் பெற்றுக் கொண்டனர்
#WATCH | Producer Varghese Moolan and actor-director R. Madhavan receive the Best Feature Film Award for 'Rocketry: The Nambi Effect', at the National Film Awards. pic.twitter.com/e8ASoc3amR
— ANI (@ANI) October 17, 2023
ஸ்ரீகாந்த் தேவா
அதேபோல் கருவறை என்ற ஆவணப்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொண்டார்.
அதேபோல் திரைப்படமல்லாத Non Feature படங்களின் பிரிவில் இயக்குநர் பி.லெனினின் “சிற்பிகளின் சிற்பங்கள்” படத்துக்கு சிறந்த கல்வி திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.