Leo update: என்னய்யா நடக்குது இங்க...? கேமியோ ரோலில் நடிக்கும் தனுஷ்? - மாஸ் காட்ட தயாராகும் லியோ!
லியோவில் விஜய்யுடன் கேமியோ ரோலில் தனுஷ் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள லியோவில் விஜய்யுடன், திரிஷா, சஞ்சய் தர், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், மிஷ்கின் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் தொடங்கிய படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. படக்குழுவினர் போஸ்ட் புரொடெக்ஷன் பணியில் தீவிரம் காட்டி வருவதால், லியோ திரைப்படம் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து பல்வேறு அப்டேட்களும், தகவல்களும், நடிகர்களின் கூட்டணி குறித்த தகவல்களும் கசிந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று லியோவில் பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
முக்கிய திரைப்பிரபலங்களின் கூட்டணியில் வர இருக்கும் லியோவின் நா ரெடி பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. அதை கேட்ட ரசிகர்கள் கதை என்னவாக இருக்கும் என்று டீகோடிங் செய்து ஓரளவுக்கு கணித்து இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் தனக்கே உரிய பாணியில் கதையில் டிவிஸ்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லியோவில் கேமியோ ரோலில் தனுஷை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் எப்படி சூர்யா நடித்தாரோ அதேபோல் லியோவில், தனுஷ் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் அது எந்த அளவுக்கு உண்மை என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.