![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
LEO Badass Lyric : “இந்த கதையில ராட்சச முகம்தான்” : வெளியானது லியோவின் பேட்ஆஸ் லிரிக்ஸ்
”சிங்கம் இறங்கனா காட்டுக்கு விருந்துஇவன் வேட்டைக்கு செதறலும் பயந்துகுடல் உறுவர சம்பவம் உறுதி”
![LEO Badass Lyric : “இந்த கதையில ராட்சச முகம்தான்” : வெளியானது லியோவின் பேட்ஆஸ் லிரிக்ஸ் LEO Second Single Out Badass Lyrical Video released Thalapathy Vijay Anirudh Watch LEO Badass Lyric : “இந்த கதையில ராட்சச முகம்தான்” : வெளியானது லியோவின் பேட்ஆஸ் லிரிக்ஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/07b886d031fca1cf43b1a7a19fa83ddd1695905149223102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
LEO Badass Lyric : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாக உள்ளது.
லோகேஷ் கனகராஜின் ஐந்தாவது படமாகவும், நடிகர் விஜய் உடனான லோகேஷின் இரண்டாவது படமாகவும் லியோ இருப்பதால் ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. லியோ அறிவிப்பு வெளியானதில் இருந்து காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடந்த படப்பிடிப்பு புகைப்படங்களும், லியோவின் ஒவ்வொரு அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தன.
லியோ படம் ரிலீசாக இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால், சென்னையில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்றும், அதில் படத்தின் டிரெய்லர் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. முன்னதாக நான் ரெடிதான் பாடலும், அஜித் மற்றும் சஞ்சய் தத் கிளிம்ப்ஸ் புகைப்படங்களும் வெளியாகி டிரெண்டாகின. அந்த வரிசையில் லியோவின் டிரெய்லர் மிரட்டலாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக லியோவின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். விஜய்யின் அசத்தலான போட்டோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டதால் துவண்டு இருந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் லோகேஷ் அறிவித்தப்படி லியோவின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியானது. பாடலாசிரியர் விஷ்ணு ஏதவன் எழுதியுள்ள பாடல் வரிகளை அனிருத் பாடி இசை அமைத்துள்ளார்.
”சிங்கம் இறங்கனா காட்டுக்கு விருந்து
இவன் வேட்டைக்கு செதறலும் பயந்து
பெரும்புள்ளிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி எழுதி
குடல் உறுவர சம்பவம் உறுதி
இதுவரையில நல்லவன் இருந்தான்
இந்த கதையில ரட்சச முகம் தான்
வத்திக்குச்சி இல்ல
எரிமலை மவனே
நெருங்காத நீ
படாஸ் மா....ஒரசாமா ஓடிடு
உன் வால சுருட்டிடு
பல ராஜாக்களை பாத்தாச்சு டா
இவன் கத்தி ரொம்க கூராச்சு டா” பாடல் வரிகள் கூஸ்பம்ப் ஏற்படுத்தியுள்ளன. பாடலில் ரத்த காட்சிகளில் விஜய்யும், அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் பேட்ஆஸ் என்ற பெயரில் வெளியான லியோவின் இரண்டாவது சிங்கிள் பாடல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)