மேலும் அறிய

Chandra Mohan: திரையுலகில் மீண்டும் சோகம்.. பிரபல நடிகர் சந்திரமோகன் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

பழம்பெரும் தெலுங்கு நடிகர் சந்திரமோகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பழம்பெரும் தெலுங்கு நடிகர் சந்திரமோகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

1946 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பம்மிடிமுக்கலாவில்  பிறந்தார். இவர் 1966 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரங்குல ராட்டினா படத்தின் மூலம் தனது சினிமா  வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ந்து 55 வருடங்கள் சினிமாவில் நடித்த அவர் 2021 ஆம் ஆண்டு தனது 81வது பிறந்தநாளின் போது சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டதட்ட 932 படங்களில் சந்திரமோகன் நடித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான நாளை நமதே படத்தில் அவரின் தம்பியாக நடித்திருப்பார். தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் கவனம் செலுத்தினார். தெலுங்கு சினிமாவில்  அவர் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் நந்தி விருதைப் பெற்றுள்ளார். மேலும்  சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். 

கடைசியாக 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆக்ஸிஜன் படத்தில் நடித்தார். ஹீரோ, நகைச்சுவை, குணச்சித்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் உறவினர் தான் சந்திரமோகன். 7ஜி ரெயின்போ காலனி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவிகிருஷ்ணாவின் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். 

இதனிடையே 82 வயதாகும் சந்திரமோகன், ஹைதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 10 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. சந்திரமோகன் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

ஏற்கனவே 1980 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்த நடிகர் கங்கா நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது சந்திரமோகன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க: Actor Ganga: தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி.. உடல்நலக்குறைவால் 80’ஸ் ஹீரோ கங்கா காலமானார்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget