உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்ட்!

Published by: ஜான்சி ராணி

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்

ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட தரவுகளின்படி, அல்லு அர்ஜூன் ஒரு திரைப்படத்திற்கு 300 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறாராம். இவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ஸ்டார் விஜய்

நடிகர் விஜய், 130 கோடி ரூபாய் முதல் 275 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளம் பெறுகிறார். இவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்தி ஸ்டார் ஷாருக்கான்

நடிகர் ஹாருக்கான், ஒரு திரைப்படத்திற்கு 150 கோடி ரூபாய் முதல் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

தமிழ் சினிமா ஸ்டார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், அவரது ஒரு திரைப்படத்திற்கு ரூ.125 கோடி - ரூ. 270 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இவர் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இந்தி ஸ்டார் அமீர் கான்

அமீர் கான், இவர் ஒரு திரைப்படத்திற்கு ரூ.100 கோடி - ரூ. 275 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இவர் 5-வது இடத்தில் இருக்கிறார்.

தெலுங்கு நடிகர் பிரபாஸ்

6-வது இடத்தில் பிரபாஸ் இருக்கிறார். ரூ. 100 கோடி - ரூ. 200 கோடி வரை ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்குகிறார்.

தமிழ் சினிமா ஸ்டார் அஜித் குமார்

7-வது இடத்தில் அஜித் குமார் இருக்கிறார். இவர் திரைப்படத்திற்கு ரூ.105 கோடி - ரூ.165 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இந்தி ஸ்டார் சல்மான் கான்

இந்தி ஸ்டார் சல்மான் கான் ரூ.100 கோடி - ரூ. 150 கோடி வரை ஒரு திரைப்படத்திற்கு வாங்குகிறார். இவர் 8-வது இடத்தில் இருக்கிறார்.

தமிழ் சினிமா ஸ்டார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் 9-வது இடத்தில் இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு ரூ. 100 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இந்தி சினிமா ஸ்டார் அக்‌ஷய் குமார்

இவர் அதிகம் சம்பளம் வாங்கும் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு ரூ.60 கோடி ரூபாய் முதல் ரூ.145 கோடி வரை வாங்குகிறார்.