2 குழந்தை தாரேன்.. நவம்பரில் சீரியல் நடிகையுடன் திருமணமா?.. கூமாபட்டி தங்கபாண்டிக்கு வந்த வாழ்வு!
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த கூமாபட்டி தங்கபாண்டி பிரபல நடிகையை திருமணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கூமாபட்டி தங்கபாண்டியன் ஆட்டம் பாட்டம் என கலக்கி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சின்னத்திரை நடிகையிடம், நான் உன்னை நவம்பர் மாசம் கூமாபட்டிக்கு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிங்கிள் பசங்க நிகழ்ச்சி குறித்தும் தனது வளர்ச்சி குறித்தும் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை மாறிவிட்டது
சிங்கிள் பசங்க நடித்தது குறித்து பேசிய தங்கபாண்டி, கூமாபட்டியில் காடு, மலை, ஆறு என்று சுத்திக்கொண்டு வீடியோ போட்டுக்காெண்டிருந்தேன். சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் சாந்தினியுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த பிறகு எனது வாழ்க்கை வேறு பாதையில் செல்கிறது. கூமாபட்டியில் இருக்கும் எல்லாேரும் எங்க இரண்டு பேரையும் பார்த்து நிஜமாகவே ஜோடி ஆகிவிட்டதாக தெரிவிக்கின்றனர். அப்படியெல்லாம் இல்லை. நிகழ்ச்சிக்காக ஜோடியாக நடிக்கிறோம் என தங்கபாண்டி தெரிவித்தார்.
தங்கபாண்டி ரொம்ப நல்ல பையன்
அதன் பிறகு பேசிய நடிகை சாந்தினி, தங்கபாண்டி வீடியோவை பார்த்துட்டு எப்படி இவரை நாம சரி பண்ண போறோம் என நினைத்தேன். நிறைய புத்தகம் படிப்பது தெரியவந்தது. நிஜத்தில் ரொம்ப டீசன்டா நடந்துக்குறான். நல்லா பேசுறான். நிகழ்ச்சியில் மட்டும் ரகளை பன்றது, கூமாபட்டி தங்கபாண்டி வெளியே வந்திடும். செட்டில் என்னை பொஞ்சாதி சொல்லி கூப்பிடுறாங்க. ஆனால், சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்கிறார். நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார் என தெரிவித்தார்.
நடிகையை திருமணம் செய்யும் தங்கபாண்டி?
பின்னர் பேசிய தங்கபாண்டி, விளையாட்டாக சாந்தினியை பார்த்து கவலைப்படாதீங்க நவம்பரில் கூமாப்பட்டிக்கு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிறேன். 2 குழந்தை தாரேன் என ஜொள்ளு விட்டு பேசினார். இதை கேட்டு ஷாக் ஆன சாந்தினி இப்படியெல்லாம் சொல்லாதடா நீயூஸ்ல போட்டுவிடுவாய்ங்க. நடிகையுடன் திருமணமா என்று செய்தி வரும் என்று சிரித்தபடி தெரிவித்தார். பின்பு, தங்கபாண்டி என்னுடைய நண்பர் தான், நீங்க எல்லாம் நினைப்பது போல காதலர் இல்லை என்று சாந்தினி பிரகாஷ் ஓபனாகவே பேசிவிட்டார்.
அவர் தான் என் குரு
அதன் பின்னர் கலகலப்பாக பேசிய தங்கபாண்டி, கூமாபட்டி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த எனக்கு நடனம், நடிப்பு சொல்லி கொடுத்த குரு சாந்தினி. டான்ஸ் மாஸ்டர் என்னை பார்த்து முறைப்பாரு, ஆனால், இவங்க என்னை பக்கத்தில் அழைத்து கூமாபட்டியை மறந்திடு. இது சென்னை சினிமாவுக்கு வர வேண்டும் என்றால் அதற்கு தயாரா இரு என்று சொன்னது புத்துணர்ச்சியா இருந்தது. அதுவும் எனக்கு கட்டிப்பிடிக்க தெரியலை, அவங்களை தொடும்போது கை நடுங்கியது. அப்போது சந்தினி தான் தைரியம் சொல்லி எப்படி கட்டிப்பிடித்து நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார் என்பதை அவர் தெரிவித்தார்.




















