Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் பிரபல நடிகை தமன்னா.
நடிகை தமன்னா முதன் முதலில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரிட்டீஷ் டிவி சீரியலான இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி கடந்த 1990ம் ஆண்டு முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இந்தியாவிலும் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழில் இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் கன்னடத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் மாஸ்டர் செஃப் கன்னடா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் செஃப் தெலுங்கு விரைவில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் அதை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார். இதன் மூலம் தமன்னா முதன்முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன்னா 1989ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர், தனது பள்ளிப்படிப்பை மும்பையிலேயே முடித்த தமன்னா தனது 13வது வயதில் மும்பை 'ப்ரித்வி தியேட்டரில்' நடிக்க தொடங்கினார். இந்நிலையில் 2005ம் ஆண்டு தனது 16வது வயதில் Chand Sa Roshan Chehra என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் தமன்னா. அதன் பிறகு தமிழ் மொழியில் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான 'கேடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று தொடங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகின்றார். அதே சமயம் பல விளம்பரங்களிலும் தமன்னா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Shalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு!
Grateful for the love ❤️ #HotstarSpecials #NovemberStory @DisneyplusHSVIP pic.twitter.com/TsITIhjwvn
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) June 14, 2021
இறுதியாக தமிழில் petromax மற்றும் ஆக்சன் என்று இரண்டு படங்களில் தோன்றிய தமன்னா, தற்போது பல தெலுங்கு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரி என்ற இணைய தொடரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் முதல் முறையாக அவர் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக களமிறங்க உள்ளார். மாஸ்டர் செஃப் என்ற அந்த நிகழ்ச்சியை தமிழில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில் தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்கவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.