Shalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு!
ஆபாசமான கேள்வி ஒன்றை கேட்டவரிடம் அதற்கு தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார் பிரபல நடிகை ஷாலு ஷம்மு.
![Shalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு! Actress Shalu Shamu bold reply for a awkward question Shalu Shamu | சைஸ் கேட்ட ரசிகர்; நறுக்குனு பதிலளித்த ஷாலு ஷம்மு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/16/5a2326682daa5442357146fe3e935ced_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2013ம் ஆண்டு பிரபல இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அந்த படத்தில் நடிகர் சூரியின் ஜோடியாக நடித்து திரையுலகில் களமிறங்கினர் நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஷாலுவிற்கு வரத்தொடங்கியது.
Make Each Day, The Best Day Of Life.
— Shalu Shamu (@ShaluShamu) June 14, 2021
PC : @rajesh.maddy #shalushamu #bossbabe #sareelove #embraceyourself #yellow #💛 #🤎 pic.twitter.com/Ti3YkfjGKF
திருட்டு பயலே 2, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து மற்றும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தார் ஷாலு ஷம்மு. மேலும் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்திலும், பவுடர் என்ற படத்திலும் அவர் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கவர்ச்சியான சில கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது பல அசத்தல் போட்டோஷூட்களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
If You Cannot Do Great Things, Do Small Things In a Great away 😊.
— Shalu Shamu (@ShaluShamu) June 13, 2021
PC : @rajesh.maddy #shalushamu #bossbabe #busygirl #brownskingirls #proudme #workonyourself pic.twitter.com/aBYSxA8gqj
Director Saran Birthday: அஜித்தின் ஆக்ஷன் எண்ட்ரி கீ சரண்! காதல் மன்னன் டூ மார்க்கெட் ராஜா!
இந்நிலையில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றுக்கு கமெண்ட் செய்த ஒருவர், ஆபாசமான கேள்வி ஒன்றை கேட்க, அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு. பெண் உறுப்பு தொடர்பான அந்த முகம் சுழிக்க வைக்கும் கேள்வியை கண்டு அதிர்ந்து நொந்து போகாமல், அளித்த மாத்திரத்தில் பதிலடி கொடுத்துள்ளார் ஷாலு. கேள்வி கேட்டவருக்கு தலை சூடாகும் ரேஞ்சுக்கு அவர் அளித்த பதில் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஷாலுவின் இந்த அதிரடி பதிலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது சில கிளாமர் போட்டோஷூட்களை வெளியிடுவது பலரும் அறிந்ததே. மஞ்சள் நிற புடவையில் அவர் அண்மையில் வெளியிட்ட போட்டோஷூட் ஒன்று ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் எந்த அளவிற்கு ஆக்டிவாக இருக்கிறோமோ, அதே அளவு, அதில் வரும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துள்ளார் ஷாலு. அதனால் தான் சர்ச்சை கேள்விகள் வரும் போது, துணிந்து பதிலளிக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)