‛முதல்வர் மருமகள்... அந்த ஃபீல் எப்படி இருக்கு?’ -கிருத்திகா உதயநிதி வெளிப்படையான பதில்!
”எல்லோரும் இதைத்தான் கேப்பாங்க ..CM வீட்டு மருமகள் எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கீங்கன்னு.”
வணக்கம் சென்னை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா. முதல்வர் ஸ்டாலினின் மருமகளும் , உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா, பிரபலம் என்ற அந்தஸ்தை பெற போராட தேவையில்லை என்றாலும், தனது சொந்த முயற்சியால் படங்களை இயக்கி கவனம் பெற்றவர்.
இறுதியாக கிருத்திகா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு , விஜய் ஆண்டனி நடிப்பில் காளி திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. பொதுவாகவே கிருத்திகாவை சுற்றி ஒரு ஒற்றை கேள்வி வலம் வரும், அதனை அவரே நினைத்தாலும் தடுக்க முடியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் . அதுதான் “ CM வீட்டு மருமகளா எப்படி ஃபீல் பண்ணுறீங்க ?” என்பதுதான் . அதற்கான பதிலை கிருத்திகாவே கொடுத்துள்ளார். மேலும் தமிழ் சினிமா குறித்தும் விரிவாக பகிர்ந்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் ”எல்லோரும் இதைத்தான் கேப்பாங்க ..CM வீட்டு மருமகள் எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கீங்கன்னு.வீட்டுல உதயும் அப்படிதான் இருக்காங்க.அத்தையும் அப்படிதான் , மாமாவும் அப்படித்தான்..அதுனால எனக்கும் எந்த வித்தியாசமும் தெரியல.. வெளியே இருந்து பார்க்கும்பொழுது வேற மாதிரியான வீடு செட்டப் , வேற மாதிரியான லைஃப்னு இருப்பாங்களோன்னு மக்கள் நினைப்பாங்க.
View this post on Instagram
எல்லோருமே செலிப்ரிட்டினாலே அப்படித்தான் நினைப்பாங்க. ஆனால் மற்ற குடும்பங்களை போலத்தான் நாங்களும் , எங்களுக்கு வித்தியாசமெல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு சின்ன வயசுல டாம் பாய் மாதிரிதான். ஃபுல் சென்னையே நான் பைக் , சைக்கிள்ல சுத்துவேன். பையானா ..பொண்ணானே சந்தேகம் வரும் , அதுதான் என்னை இப்போ எந்த பிரச்சனையா இருந்தாலும் சமாளிக்கிறதுக்கான துணிவை கொடுக்குதுன்னு நினைக்கிறேன். எனக்கு சின்ன வயசுல கார்த்திக் பிடிக்கும். ஆனால் நான் விக்ரம் சார் மற்றும் தனுஷ் சார இயக்கனும்னு ஆசை . அதுக்காக நான் ஸ்கிரிப்ட் எழுதனும்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை கண்டெண்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை எடுக்க ஆரம்பிக்கணும் . என்னோடு சேர்த்து பல இயக்குநர்கள் ஒரே மாதிரியான தமிழ் சினிமாவிற்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் தயாரிப்பாளர் ஓக்கே சொல்ல வேண்டும் என்பதுதான். பயம் இருக்கும் இப்படியான பாடல் , சண்டைக்காட்சிகள் வைக்க வேண்டும் அப்போதான் ஆடியன்ஸிற்கு பிடிக்கும் என்று. சர்வதேச படங்களை இயக்குபவர்கள் இத்தகைய பயம் இல்லாமல் எழுதுறாங்க, அவங்களுக்காக படம் எடுக்குறாங்க “ என வெளிப்படையாக பேசியுள்ளார் கிருத்திகா.