தெலுங்கிலும் அடி.. மலையாளத்திலும் ப்ளாப்.! சோக கீதம் வாசிக்கும் கீர்த்தி! ரசிகர்கள் அட்வைஸ்!
படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என திரையுலக வட்டாரத்தினர் அவருக்கு அட்வைஸ் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது
நடிகர் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் சர்க்காரு வாரி பட்டா மலையாளத்தில் வாஷி என பல படத்தில் நடித்தாலும் அத்தனை பெரிய பட்ஜெட் படங்களுமே ப்ளாப் ஆகி வருவதால் சோகத்தில் உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதனால் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என திரையுலக வட்டாரத்தினர் அவருக்கு அட்வைஸ் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
நடிகர் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மகாநடி திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து நடித்திருந்தார் நடிகர் கீர்த்தி சுரேஷ். அதற்காக நந்தி விருதைப் பெற்றார்.இதை அடுத்து அவருக்கு பயோபிக் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து அதனைத் தவிர்த்துவிட்டு கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார் கீர்த்தி.இதை அடுத்து ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த பெரிதும் வெற்றிப்படமாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது ஆடியன்ஸுக்கு பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. இதை அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபு உடன் சேர்ந்து சர்க்காரு வாரி பட்டா என்னும் படத்தில் நடித்தார்.அந்தப் படம் சரிவரப் போகவில்லை.
View this post on Instagram
மலையாளத்தில் தனது சொந்தத் தயாரிப்பில் டொவினோ தாமஸுடன் வாஷி படத்தில் நடித்தார்.அந்தப் படமும் சரிவரப் போகவில்லை. தமிழில் இயக்குநர் செல்வராகவனுடன் அவர் நடித்த சாணிக் காயிதம் படம் பெரிதும் பேசப்பட்டது என்றாலும் வேறு எந்தப் படங்களும் சக்ஸஸ் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது.
View this post on Instagram
இதை அடுத்து அவர் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என அட்வைஸ் குவிந்தபடி உள்ளன. மேலும் பயோபிக் படங்கள் அவருக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதால் அதுபோன்ற படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேணும் என அட்வைஸ் குவிந்து வருகிறது.