Sardar 2 : தொடங்கியது கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு
பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது
![Sardar 2 : தொடங்கியது கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு Karthi sardar 2 directed by p s mithran shoot begins today Sardar 2 : தொடங்கியது கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/12/7aa29ddd1b593f1461dcd033b53435da1720760124950572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சர்தார் 2
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். ஆக்ஷன் த்ரில்லராக உருவான இப்படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடித்திருந்தார். சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று சர்தார் படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. வரும் ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப் பட்டு படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றன. ப்ரின்ஸ் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படக்குழுவினர் பற்றிய தகவல்கல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
The auspicious pooja for #Karthi starrer #Sardar2 took place recently and the shooting of the film is scheduled to start on July 15th 2024 in grand sets in Chennai.@Karthi_Offl @psmithran @Prince_Pictures @lakku76 @venkatavmedia @thisisysr @george_dop @rajeevan69 @dhilipaction… pic.twitter.com/nVraSAbMi4
— Prince Pictures (@Prince_Pictures) July 12, 2024
கார்த்தி நடித்து வரும் படங்கள்
கார்த்தி தற்போது பிரேம் குமார் இயக்கும் மெய்யழகன் படத்தில் நடித்து வருகிறார். அரவிந்த் சாமி , ராஜ்கிரண் , ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
மெய்யகழன் படம் தவிர்த்த் கார்த்தி நடித்துள்ள மற்றொரு படம் வா வாத்தியாரே. சூது கவ்வும் , காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார். க்ரித்தி ஷெட்டி , சத்யராஜ் , ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். கார்த்தியின் 29 ஆவது படத்தை டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி கடந்த ஆண்டு வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் வெற்றி இயக்குநர்களின் கூட்டணியில் அடுத்தடுத்த படங்களில் கார்த்தி நடித்து வருவது இந்தப் படங்களின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க : Indian 2 Twitter Review : அலறவிட்டதா ஷங்கர், கமல், அனிருத் கூட்டணி.. ட்விட்டரில் ரசிகர்கள் சொல்வது என்ன?
Ram Charan : நடிகர் ராம் சரண் வாங்கிய புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்...எத்தனை கோடி தெரியுமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)