Kantara Box Office: கன்னட சினிமாவின் காட்டு ஹிட்.. 100 கோடியை எட்டிய ‘காந்தாரா’... பிற மொழி வசூல் தெரியுமா?
‘காந்தாரா’ திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூல் செய்துள்ளது.
‘காந்தாரா’ திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூல் செய்துள்ளது.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. கன்னடத்தில் உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்து படம் வெளியிடப்பட்டுள்ளது.
ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரின் அபாரமான நடிப்பை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலமாகவும் நேரடியாகவும் சென்று வாழ்த்தி வருகிறார்கள். "காந்தாரா" படத்தின் தமிழ் டப்பிங் திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தமிழில் வெளியானது.
View this post on Instagram
படத்தில் ரிஷப் என்ட்ரியே திரையரங்குகளை தெறிக்கவிட்டது. கூஸ் பம்ப்ஸ் காட்சிகளால் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். படத்தில் அன்பு, காமெடி, ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு முழு நீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக காந்தாரா வந்துள்ளதால் அனைத்து மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹிந்தியில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி வெளியான காந்தாரா படம் 8 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதியான ஞாயிற்று கிழமை மட்டும் இந்தப்படம் 4 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.
#Kantara Opening Day Gross in Telugu States ₹4.05 Cr apx.
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) October 16, 2022
Karnataka Opening Day (Sep 30) ₹2.5 Cr apx.
This is the love of Telugu Cinegoers towards Movies if it “appeals” to them!! pic.twitter.com/uctKhaPJVR
Superb response for #Kantara Tamil version today …
— Rakesh Gowthaman (@VettriTheatres) October 15, 2022
Sunday morning Spl show @ 8am in Screen Rakesh …
&#Vettri main screen on Tue & Wed Noon Show …
கடந்த சனிக்கிழமை தெலுங்கிலும் வெளியிடப்பட்ட இந்தப்படம் வெளியான இரண்டு நாட்களில் 10 கோடி வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் வெளியான அன்றைய தினம் மட்டும் தோராயமாக 4.05 கோடியை இந்தப்படம் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கர்நாடகாவில் வெளியான அன்றைய தினம் 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் காந்தாரா திரைப்படம் 17 நாட்கள் முடிவில் உலக அளவில் 100 கோடியை வசூல் செய்துள்ளது.