Meiyazhagan : மெய்யழகன் படம் பணம் பண்ணவில்லையா...வெளிப்படையாக பேசிய சூர்யா
மெய்யழகன் படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்கிற கருத்திற்கு படத்தின் தயாரிப்பாளர் சூர்யா பதிலளித்துள்ளார்
மெய்யழகன்
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி அரவிந்த் சுவாமி நடிப்பில் கடந்த மாதம் வெளியா படம் மெய்யழகன். சூர்யா ஜோதிகாவுன் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்தது. 96 படத்திற்கு பின் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான மெய்யழகன் படத்திற்கு ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாகி விமர்சகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றாலும் ஆடியன்ஸிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக படத்தின் நீளம் பார்வையாளர்களை சோர்வடைய செய்வதாக பலர் கருதியதால் படத்தின் நீளம் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடியின் படத்திற்கு மேலும் பாசிட்டிவான விமர்சனங்களே வந்துள்ளன. மெய்யழகன் படம் எதிர்பார்த்த வசூலை எடுக்கவில்லை என்கிற கருத்து சினிமா வட்டாரங்களில் நிலவி வருகிறது. இது குறித்து அப்படத்தின் சூர்யா தற்போது பதிலளித்துள்ளார்.
மெய்யழகன் வசூல் பற்றி சூர்யா
"மெய்யழகன் படத்தை தயாரித்ததற்காக நான் ரொம்ப பெருமைப்படுகிறேன். அது நவீன இலக்கியத்தின் பிரதிபலிப்பு. சமகாலத்தில் மக்கள் எந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை இந்த படம் பேசுகிறது. மெய்யழகன் படம் பேசியதை வேறு எந்த படமும் பேசவில்லை. மெய்யழகன் படத்தின் வசூலைப் பற்றி நான் பேச நினைக்கவில்லை. அப்படத்தில் எனக்கு 25 சதவீதம் அதிகமாகவே லாபம் கிடைத்தது. நான் 10 சதவீதம் கிடைத்தாலே போதும் என்றுதான் நினைத்தேன். ஒவ்வொரு படத்திற்கு ஒரு இலக்கு இருக்கிறது. தண்ணீரை 5 ரூபாய்க்கும் விற்கலாம் 10 ரூபாய்க்கும் விற்கலாம் இந்த விலையை யார் நிர்ணயிப்பது. ஒரு படம் வெற்றியா தோல்வியா என்பது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டும் தெரிந்தால் போதும் சமூக வலைதளத்தில் இந்த படம் இவ்வளவு வசூல் செய்தது என்று இன்னொருவர் ஏன் சொல்ல வேண்டும். மெய்யழகன் படத்தை தயாரித்ததில் எனக்கு மகிழ்ச்சியே." என்று சூர்யா தெரிவித்துள்ளார்
Q: #Meiyazhagan celebrated by critics but under performed in BO❓#Suriya: I made more than 25% profit in Meiyazhagan📈. It's about the quality of content, not the Box office👌. I didn't see any recent films documenting Human emotions like meiyazhagan🫶❣️ pic.twitter.com/YfVWuuxdRC
— AmuthaBharathi (@CinemaWithAB) October 28, 2024