Kana Kanum Kalangal: 'இதுதானா.. இவன்தானா..' இனிதாய் நடந்த தீபிகா - ராஜா திருமணம்...! இணையத்தில் குவியும் வாழ்த்து..!
கனா காணும் காலங்கள் பிரபலங்களான தீபிகா - ராஜா திருமணம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கனா காணும் காலங்கள் பிரபலங்கள் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு ஆகிய இருவரின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. தாலி கட்டும்போது கண்கலங்கிய தீபிகாவின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
கனா காணும் காலங்கள்:
2006 முதல் 2013 வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் தமிழ் மக்களை தொலைக்காட்சி முன் கட்டிபோட்டு வைத்தது என்றே சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் இந்தத் தொடருக்கு ரசிகர்களாக இருந்தார்கள். குறிப்பாக இளஞர்களுக்கு ஒரு நல்ல டீ ஏஜ் டிராமாவாக கணாகாணும் காலங்கள் இருந்தது. இந்தத் தொடரில் நடித்த நடிகர்களை பலர் தங்களது க்ரஷ்களாக கொண்டிருந்தார்கள். 2013 ஆம் ஆண்டில் கனா காணும் காலங்கள் தொடர் முடிவிற்கு வந்தது. ரசிகர்கள் அதிக மிஸ் செய்த ஒரு தொடர் இது. இந்தக் குறையைத் தீர்ப்பதற்காக கனா காணும் காலங்கள் தொடர் அதே பெயரின் புதிய நடிகர்கள் மற்றும் புதிய கதையுடன் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
ரீல் ஜோடி - ரியல் ஜோடி:
முந்தையத் தொடரைப் போலவே இந்தத் தொடரும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் அனைவரும் மிகப் பிரபலமானார்கள். தற்போது இந்தத் தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா மற்றும் கெளதம் கதாபாத்திரத்தில் நடித்த ராஜா வெற்றி பிரபு ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு சின்னத்திரைப் பிரபலங்கள் வருகை தந்திருந்தார்கள் மேலும் பலர் தங்கது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். திருமணத்தில் தாலி கட்டும்போது தீபிகா உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
குவியும் வாழ்த்து:
கனா காணும் காலங்கள் தொடருக்கு முன் தீபிகா டிக்டாக்கில் புகழ்பெற்ற ஒரு நபராக இருந்தார். தீபிகா மற்றும் அவரது எக்ஸ் பாய்ஃபிரண்ட் இருவரும் சேர்ந்து பல்வேறு ரிலேஷன்ஷிப் தொடர்பான வீடியோக்களை போட்டுவந்தார்கள். பின்பு சில காரணங்களால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். அண்மையில் தீபிகா தனது திருமணச் செய்தியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தனது ஆறு ஆண்டுகால நண்பரை தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மட்டும் தெரிவித்திருந்தார் தீபிகா.
ஆனால் ரசிகர்கள் அந்த அடையாளம் தெரியாத நண்பர் ராஜா தான் என்று மிகச் சரியாக கணித்துவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து தீபிகா மற்றும் ராஜா ஆகிய இருவரும் தங்களது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். மேலும் தங்களது திருமண வேலைகள் ஏற்பாடுகள் ஆகிய அனைத்து நிகழ்வுகளையும் இணையதளத்தில் பகிர்ந்து வந்தார்கள். இந்த நிலையில் சென்னையில் இவர்கள் இருவரின் திருமணம் மிக கோலாகலமாக நடந்துமுடிந்தது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.