Vikram | ஒருபக்கம் விஜய் சேதுபதி.. மறுபக்கம் பஹத்.. இதுதான் மாஸ்... வைரல் போட்டோ!
தற்போது தனது திரையுலக பயணத்தில் அடுத்த மைல்கல்லாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ்
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் பட ஷூட்டிங் ஸ்பார் ஸ்டில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பஹத் பாஸிலும், விஜய் சேதுபதியும் உள்ளனர்
வளர்ந்துவரும் இளம் இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டார் லோகேஷ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தன்னுடைய யதார்த்தமான இயக்கத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகு சுலபத்தில் ஈர்த்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ’கைதி’யை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. பல ஆண்டுகளாக ரசிகனாக நடிகர் விஜயை ரசித்துவந்த லோகேஷ் ’மாஸ்டரை’ இயக்கி, கடந்த பொங்கலுக்கு வெளியிட்டார்.
தற்போது தனது திரையுலக பயணத்தில் அடுத்த மைல்கல்லாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கிவருகிறார். தேர்தல் முடிந்த கையோடு, கமல்ஹாசன் தற்பொழுது விக்ரம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டார் என்பது தெரிந்த அப்டேட்தான். படத்தில் பகத்ஃபாசில் இணைகிறார் என்று ஒரு நிகழ்ச்சி பேட்டியில் தெரிவித்திருந்தார் . ரசிகர்கள் இடையில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பின் தொடர்ச்சியாக விஜய் சேதுபதியும் படத்தில் இணைந்தார். கொரோனா ஊரடங்கு தேர்தல் பரபரப்புக்களை அடுத்து தற்போது படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விக்ரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ஏற்கெனவே வரவேற்பை பெற்றது.
Absolute Bliss ✨@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @RKFI #Vikram#vikramsecondschedule pic.twitter.com/BVegxNoC86
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 25, 2021
தனக்கென தனி ஸ்டைலை வைத்திருக்கும் லோகேஷ் நடிப்பு அசுரர்களை இப்படத்தில் ஒன்றாக இணைத்துள்ளார். அதனால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் பட ஷூட்டிங் ஸ்பார் ஸ்டில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பஹத் பாஸிலும், விஜய் சேதுபதியும் உள்ளனர். இருவரும் கேமராவைப் பார்த்து நிற்பது போல அப்படம் இருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள லோகேஷ், புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக விக்ரம் பட தொடர்பான பல அப்டேட்களையும் லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
Welcome onboard sir👍 Happy to work with you again sir ! https://t.co/nBAVzvzoci
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 24, 2021
Keep inspiring us sir 🙏#62YearsOfKamalism pic.twitter.com/Sr4PH6vNZd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 11, 2021