Kabilan Vairamuthu: ‘நிலம் யாருடையதோ அதிகாரம் அவர்களுடையது’.. புதிய நாவலை அறிமுகப்படுத்திய கபிலன் வைரமுத்து!
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து இன்று தனது புதிய நாவலை அறிமுகப்படுத்தும் விதமாக புத்தகத்தின் பின் அட்டைப் படத்தை வெளியிட்டுள்ளார்.
கபிலன் வைரமுத்து கவிஞர் வைரமுத்துவின் இளைய மகன் ஆவார். இவர் திரைப்பட பாடலாசிரியர்,கவிஞர், வசன எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 'உலகம் யாவையும்', 'என்றான் கவிஞன்', 'மனிதனுக்கு அடுத்தவன்', 'கடவுளோடு பேச்சுவார்த்தை', 'கவிதைகள் 100' என பல்வேறு கவிதைகள் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இவர் ‘கவண்’, ‘விவேகம்’ ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
View this post on Instagram
இந்த நிலையில், எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து தான் எழுதியிருக்கும் புதிய நாவலை அறிமுகப்படுத்தும் விதமாக புத்தகத்தின் பின் அட்டைப் படத்தை தன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
இது குறித்து அவர் செய்திருக்கும் பதிவு இது:
நிழலுடைமை
நிலம் யாருடையதோ அதிகாரம் அவர்களுடையது என்பது வரலாறு. அது நிலவெளி எதார்த்தம். நிழல்வெளியாக இருக்கும் இணையவெளி நவீன நிலவுடைமைச் சமூகமாக தன்னைக் கட்டமைத்துவருகிறது. Digital Feudalism என்று ஆங்கில அறிஞர்கள் அழைக்கும் நிழலுடைமை ஆதிக்கத்திற்கும் தரவுகளின் பரிமாற்றமே எரிபொருளாக இருக்கிறது. வெளிவரவிருக்கும் என் நாவல்நிழலுடைமைத்துவம் குறித்த ஒரு மாய வேடிக்கை.
ஒரு புத்தகத்தை அதன் தலைப்பில் இருந்தும் அட்டைப் படத்தில் இருந்தும் அறிமுகம் செய்வதுவழக்கம். என் புத்தகத்தின் பின் அட்டையாக அமைந்திருக்கும் இந்த ஓவியத்தில் இருந்து என்அறிமுகத்தைத் தொடங்குகிறேன். நண்பர் ஹாசிப்கான் வரைந்திருக்கும் இப்படம் கதையில் வரும் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறித்தாலும் எக்காலத்திற்குமான குறியீடாக இது அமைந்திருக்கிறது.
நாவலுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று நீண்ட நாட்கள் யோசித்து ஒரு பெயர் கிடைத்தது. பலநூற்றாண்டு கால தூசு தட்டி அதை அச்சில் ஏற்றியிருக்கிறோம்.
வருகிற திங்கள் காலை 10:30 மணிக்கு நூலின் தலைப்பும் - முகப்பும் - வெளியீட்டு தேதியும்…
அன்புடன்
கபிலன் வைரமுத்து
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
.