‛29 நாள்... 29 லட்சம்...’ புரியாத புதிரும் புதிய ஃபார்முலா இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அறிமுகமும்!
K. S. Ravikumar: ‛30 நாட்கள் 30 லட்சம்’ என்கிற பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்ட படத்தை, ‛29 நாட்கள் 29 லட்சம்’ என்று முடித்துக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர்களின் இயக்குனராக இன்று தான் அறிமுகமானார்.
விபத்தாக சினிமாக்குள் வந்த கே.எஸ்.ரவிக்குமார், பல படங்களில் பணியாற்றிய பிறகு, புதுவசந்தம் படத்தில் இயக்குனர் விக்ரமனிடம் அசோஷியட் இயக்குனராக பணியாற்றி, தன்னை நிரூபித்து காட்டினார். பல்வேறு காரணங்களுக்காக சினிமா வேண்டாம் என 1989ல் பிளாஸ்டிக் தொழிலுக்கு மாறினார்.
ஆனால் அவரது நண்பர் ஒருவர் மூலமாக வேறு ஒரு வாய்ப்பு அவரை தேடி வந்தது. பார்த்திபனின் உதவி இயக்குனர் மணி என்பவர் படம் செய்ய போகிறார் அவருக்கு உதவிக்கு நீ தான் வேண்டும் என அந்த நண்பர் ரவிக்குமாரை அணுகினார். இரண்டு முறை அதை நிராகரித்த ரவிக்குமார், மூன்றாவது முறை வரும் போது, வேறு வழியின்றி சில நிபந்தனைகளை விதித்தார் கே.எஸ்.ரவிக்குமார். அப்படி தான், புதுவசந்தம் படத்தில் வந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.
View this post on Instagram
அப்போது திடீரென ஆர்.பி.செளத்ரியிடம் அழைப்பு. அங்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமாரிடம், ஒரு கன்னட படத்தை காண்பித்தார் செளத்ரி. அதை பார்த்த கே.எஸ்.ரவிக்குமார், ‛படம் த்ரில்லிங்கா இருக்கு... ஆனால் கொஞ்சம் ஃபோர் அடிக்குது...’ என்று கூறியுள்ளார். ‛சரி, நீ இந்த கதையை ஃபோர் அடிக்காமல், திரைக்கதை எழுது’ என்று கூறிய செளத்ரி, ஒரு அறை ஒன்றை ஒதுக்கி, ரவிக்குமாருக்கு இடமளித்தார். 5 நாளில் திரைக்கதை எழுதிய ரவிக்குமார், அதை செளத்ரியிடம் கதையை கூறினார்.
கதையில் நிறைய மாற்றியிருந்த கே.எஸ்.ரவிக்குமாரிடம், ‛பாடல், சண்டை, கொலை, காமெடி என நிறைய புதியவற்றை சேர்த்திருக்கிறாய்.. அதை விட கூடுதல் நீளம் ஆகிவிடாத’ என்று கேட்டுள்ளார் செளத்ரி. ‛அதெல்லாம் ஆகாது சார்... டைரக்டர் அதை சரி செய்து விடலாம்’ என்று கூறியுள்ளார் ரவி. ‛சரி, எஸ்.ஏ.ராஜ்குமாரை அனுப்பி வைக்கிறேன்; அவரிடம் ட்யூன் கேளுங்கள்’ என்று கூறினார் செளத்ரி. ‛அதை டைக்டர் தான் சார் கேட்கணும்’ என்று கூறிய ரவிக்குமாரிடம், ‛நீ தான்யா டைரக்டர்...’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் செளத்ரி. இதை கேட்டு ஷாக் ஆனார் ரவி. 10 ஆண்டுகளாக தன்னை யாராவது டைரக்டர் என்று கூற மாட்டார்களா என்று ஏங்கியிருந்த ரவிக்குமாருக்கு ஒரே மயக்கம்.
ஆனால் மறு நாள் செளத்ரியை சந்தித்த ரவிக்குமார், படத்தை நான் இயக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பின் நான் படம் பண்றேன்; எனக்கு படம் திருப்தியாக இருக்க வேண்டும். இது ஒரு முறை சஸ்பென்ஸ் திரைப்படம். ரிபீட் ஆடியன்ஸ் வர மாட்டாங்க...’ என்று கூறியுள்ளார் ரவிக்குமார். ‛சரி இந்த படத்தை எனக்கு பிடித்த மாதிரி எடுத்துக் கொடு... அடுத்து உனக்கு பிடிச்ச மாதிரி எனக்கு ஒரு படம் எடுத்துக் குடு’ என்று கூறினார் செளத்ரி.
ஆர்.பி.செளத்ரி ஆசைக்காக எடுத்த கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படம் தான், ‛புரியாத புதிர்’. பின்னர் ரவிக்குமாருக்காக செளத்ரி தயாரித்த படம் சேரன் பாண்டியன். கே.எஸ்.ரவிக்குமார் என்கிற இயக்குனரை அறிமுகப்படுத்திய புரியாத புதில் திரைப்படம், 1990 செப்டம்பர் 7 ம் தேதி இதே நாளில் தான் வெளியானது. ரகுவரன், ரகுமான், ஆனந்த்குமார், ரேகா என பல கதாபாத்திரங்கள் நடித்த த்ரில்லர் திரைப்படம். வேறொரு கதையை தன் பாணிக்கு மாற்றி இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார், பின்னர் தனக்கான ஒரு பாணியை உருவாக்கி தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரிய ஜாம்பவவான்களுடன் வெற்றி படங்களை பகிர்ந்த கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்தார், வலம் வருகிறார்.
‛30 நாட்கள் 30 லட்சம்’ என்கிற பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்ட படத்தை, ‛29 நாட்கள் 29 லட்சம்’ என்று முடித்துக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர்களின் இயக்குனராக இன்று தான் அறிமுகமானார்.