‛என் மகனுக்கு ஹிந்தி சுத்தமா பிடிக்காது..’ ஜோதிகா சொன்ன சுவாரஸ்யம்!
5 வருட பிடிவாத காதல்தான் மனம் இறங்க வைத்தது, ஜோதிகாவை மருமகளாக அடைய நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சமீபத்திய பேட்டிகளில் சிவக்குமார் பேசுவதையும் கேட்டிருக்கிறோம்.
கோலிவுட்டில் ஒரு குடும்பம் அதிகம் உற்றுநோக்கப்படுகிறது என்றால் அது சிவக்குமாரின் குடும்பம்தான். சினிமா நடிகர் என்றாலே கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருக்காதுதானே ! ஆனால் அதில் எல்லாம் சிக்காமல் கிராமத்து மனிதராக எளிமையாக வாழ்பவர் சிவக்குமார். தனது மகன்கள் சூர்யா , கார்த்தியையும் , மகள் பிருந்தாவையும் அப்படியாகத்தான் வளர்த்திருக்கிறார். இருவருமே படம் நடிப்பதை தாண்டி சமுதாய அற்பணிப்புடன் செயல்படுவதை பார்க்க முடிகிறது. சூர்யா ஜோதிகாவை காதலித்தபொழுது அவர்களின் திருமணத்திற்கு தடையாக இருந்தவர் சிவக்குமார். 5 வருட பிடிவாத காதல்தான் தன்னை மனம் இறங்க வைத்தது, ஜோதிகாவை மருமகளாக அடைய நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சமீபத்திய பேட்டிகளில் சிவக்குமார் பேசுவதையும் கேட்டிருக்கிறோம்.
ஜோதிகா பீக்கில் இருந்த சமயத்தில் திரைத்துறையை விட்டு விலகி, குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார். குழந்தைகள் பிறந்தது, அவர்களுக்காகவே அதிக நேரம் செலவிட தொடங்கிவிட்டார். குழந்தைகள் வளர்ந்த பிறகு தற்போது செலக்டிவான படங்களில் நடித்து வருகிறார். நேர்காணல் ஒன்றில் ஜோதிகா தனது குழந்தைகள் குறித்தும் குடும்பம் குறித்தும் சில சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அதில் ”நானும் சூர்யாவும் அதிகமா தமிழ்லதான் இப்போ அதிகமா பேசுவோம். குழந்தைகளிடமும் தமிழ்லதான் பேசுவேன். அவங்கள் அதிகமா தமிழ்லதான் பேசுவாங்க, சில நேரங்களில் ஆங்கிலத்தில் பேசுவாங்க. என் பொண்ணு இந்தி நல்லா பேசுவா. ஆனால் என் பையனுக்கு இந்தி பிடிக்காது. அது சொல்லிக்கொடுத்தா “தயவுசெய்து ..அம்மா இந்தி நஹி,,,”அப்படினு சொல்லுவாங்க. எனக்கு அவங்க ரொம்ப இந்தி மற்றும் நிறைய மொழிகள் பேசனும்னு ஆசை இருக்கு. சூர்யா ஆக்ஷன் சூப்பரா பண்ணுவாரு. டூப் போடாம பண்ணுவாரு . கணவன் மனைவி இடையே உறவு நல்லா இருக்கனும்னா ஒருத்தரை ஒருத்தர் பாராட்டவும் ஊக்கப்படுத்தவும் கத்துக்கணும். புரிதலை தாண்டியும் அது இருக்கணும். கணவன் மனைவி மட்டுமல்ல எல்லா உறவுக்குமே அது வேண்டும்.” என்றார் ஜோதிகா.