John Kokken : அந்த மாதிரி வில்லன்னு நினைக்காதீங்க... இயக்குநர் வினோத் இப்படித்தான்..! - ஜான் கொக்கன்
இதுவரைக்கும் மிரட்டலான வில்லனாக நடித்தேன், துணிவு திரைப்படத்தில் தான் முதல் முறையாக வில்லத்தனத்தை காமெடியாக செய்தேன். எனக்கும் காமெடி வரும் என்பதை செய்து காட்டியவர் ஹெச். வினோத்.

பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் குவித்து வருகிறது.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ஜி.எம். சுந்தர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
View this post on Instagram
ஹெச். வினோத் எப்படி பட்டவர் :
இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்த ஜான் கொக்கன் துணிவு படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பல தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில் "இயக்குனர் ஹெச். வினோத் சாரை பொறுத்தவரையில் பர்ஃபேக்ஷன் மிகவும் முக்கியம். ஒரு காட்சி சரியாக வரும் வரை அவர் திருப்தி அடைய மாட்டார். வினோத் சார் எப்பவுமே அப்படி தான். ஒரு நடிகராக அவருடன் இந்த திரைப்படத்தில் கிடைத்த அனுபவத்திற்கு பிறகு தான் எனக்கும் காமெடி வரும் என்பதை நான் உணர்ந்தேன். நான் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளேன். இது வரையில் நான் நடித்த படங்களில் எல்லாம் ஆக்ஷன், ஏய், ஓய், கொன்னுடுவேன் இப்படி தான் பெரும்பாலும் பேசியிருப்பேன். பெரும்பாலும் இது போன்ற டைலாக் தான் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் முதல் முறையாக துணிவு திரைப்படத்தில் தான் எனக்கு அதிக அளவிலான ரீயாக்ஷன், காமெடி என இருந்தது. அதிலும் மிரட்டலான வில்லனாக இல்லாமல் மிகவும் சாதாரணமான ஒரு வில்லனாகவே நடித்திருந்தேன். முதல் முறையாக நிறைய வேரியேஷனை எனக்குள் இருந்து கொண்டு வந்தார்கள். இப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது" என தனது வித்தியாசமான அனுபவம் குறித்து பேசி இருந்தார் நடிகர் ஜான் கொக்கன்.
Thank you AJITH KUMAR Sir for motivating me to come this far. You are the best. There is nobody like you. It was an honour to share screenspace with you again.
— Highonkokken (@johnkokken1) January 11, 2023
Please watch #thunivu in theatres near you.#thunivupongal #thunivupongal2023 #thunivurageforpongal #Gangstaa pic.twitter.com/sAN6DggmjT
அஜித் சாருக்கு நன்றி :
மேலும் நடிகர் அஜித் பற்றி ஜான் கொக்கன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். " நான் இந்த அளவிற்கு வருவதற்கு என்னை மோட்டிவேட் செய்ததற்கு அஜித் சாருக்கு தான் நான் நன்றி கூற வேண்டும். நீங்கள் தான் பெஸ்ட். உங்களுடன் திரையை பகிர்ந்ததை நான் பெருமையாக நினைக்கிறன்" என பதிவிட்டு இருந்தார் நடிகர் ஜான் கொக்கன்.






















