Jawan: தெறிக்கும் கெமிஸ்ட்ரி... ஷாருக் - தீபிகா இணையும் 5வது படம்.. ஜவான் ட்ரெய்லர் காட்சிக்கு ஹார்ட்டின் விடும் ரசிகர்கள்!
தனது முதல் படமான ஓம் ஷாந்தி ஓம் தொடங்கி, ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ், பதான் என முந்தைய படங்கள் அனைத்திலும் ஷாருக் - தீபிகா ஜோடி ரசிகர்களை ஈர்த்து இதயங்களைக் குவித்துள்ளது.
ஜவான் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக் , நயன் தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜவான். வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜவான் ட்ரெய்லர்
பாலிவுட் படமாக இருந்தாலும், பெரும்பான்மை கோலிவுட் பிரபலங்கள் இப்படத்தில் நிரம்பி வழிவதால் தமிழ் சினிமா ரசிகர்களும் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் களைகட்டிய நிலையில், சென்னைக்கு வருகை தந்த நடிகர் ஷாருக், அட்லீயுடன் குத்தாட்டம், விஜய் சேதுபதி, அட்லீயிடம் பாசமழை என லைம்லைட்டை ஒட்டுமொத்தமாக அபகரித்து பேசுபொருளானார்.
தொடர்ந்து இன்று ஜவான் ட்ரெய்லர் வெளியான நிலையில், இணையத்தில் காலை முதலே ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறது.
தீபிகா - ஷாருக் ஜோடி
ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் முதன்முறையாக இணைந்துள்ள நிலையில், இரண்டாவது ஹீரோயினாக கேமியோ பாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஜவான் படத்தின் ஷாருக் இரட்டை வேடம் ஏற்றுள்ளது இன்றைய ட்ரெய்லரில் தெரிய வந்துள்ள நிலையில், ஃப்ளாஷ்பேக் காட்சியில் வரும் ஜவான் ஷாருக் கானுக்கு ஜோடியாக மல்யுத்த வீரர் போல் தீபிகா தோன்றும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஷாருக் - தீபிகா இடையேயான க்யூட்டான மோதலுடன் கூடிய காதல் காட்சி, பாலிவுட் ரசிகர்களை ஈர்த்து இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
ஷாருக் கானுடன் ஓம் ஷாந்தி ஓம் படத்தில் 2007ஆம் ஆண்டு அறிமுகமானது முதலே தீபிகா - ஷாருக் ஜோடி ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஜோடியாக வலம் வருகின்றனர்.
5ஆவது படம்
தனது முதல் படமான ஓம் ஷாந்தி ஓம் தொடங்கி, ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ், பதான் என முந்தைய படங்கள் அனைத்திலும் ஷாருக் - தீபிகா ஜோடி ரசிகர்களை ஈர்த்து இதயங்களைக் குவித்துள்ளது. ஆஃப் ஸ்க்ரீனிலும் ஷாருக்கான் மீதான அன்பை வெளிப்படுத்த தயங்காத தீபிகா படுகோன், தன் திரை வாழ்வில் முக்கியமான, தான் பெரிதும் மதிக்கும் நபராக தொடர்ந்து ஷாருக்கானை குறிப்பிட்டு வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது ஜவான் படத்தில் ஷாருக் - தீபிகா 5வது முறையாக இணைந்துள்ளனர். பாலிவுட்டுக்கு சம்பந்தமில்லாத புதிய படக்குழு என்றபோதிலும், ஷாருக்கானுக்காக தான் இப்படத்தில் தீபிகா படுகோன் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுதான் கெமிஸ்ட்ரி
I am gonna scream watching Deepika Padukone doing this on-screen 🔥🫡#JawanTrailer | #Jawan #DeepikaPadukone pic.twitter.com/ySy7e8sdzN
— Veer ࿗ (@offline_veer) August 31, 2023
இந்நிலையில், இன்றைக்கு வெளியான ஜவான் ட்ரெய்லரில் புடவை அணிந்து ஷாருக்கானுடன் காதல் பார்வை பார்த்தபடி தீபிகா மல்யுத்தத்தில் ஈடுபடும் காட்சி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
15 ஆண்டுகள் கடந்தும் தீபிகா - ஷாருக் இடையேயான கெமிஸ்ட்ரி அப்படியே உள்ளது என்றும், எவர் க்ரீன் ஜோடி என்றும் பாலிவுட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஜவான் படத்தில் பிரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத்தும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கும் நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.