Jailer: 15 நொடிகளில் காலியான 'ஜெயிலர்' டிக்கெட்டுகள்... சூப்பர் ஸ்டார் மாஸ் தான்பா!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டி வருகிறது.
![Jailer: 15 நொடிகளில் காலியான 'ஜெயிலர்' டிக்கெட்டுகள்... சூப்பர் ஸ்டார் மாஸ் தான்பா! jailer audio launch 1000 free tickets sold out just in 15 seconds Jailer: 15 நொடிகளில் காலியான 'ஜெயிலர்' டிக்கெட்டுகள்... சூப்பர் ஸ்டார் மாஸ் தான்பா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/f062d702fce1936456b3f01e27c07f0a1690194499390571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜூலை 28ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இவ்விழாவில் பங்கேற்க ஆயிரம் இலவச டிக்கெட்டுகளை விநியோகம் செய்ய இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முடிவு செய்தது. இந்த இலவச டிக்கெட்டுகளுக்கான லிங்கை இணையத்தில் பதிவேற்றம் செய்த 15 நொடிகளில் மொத்த டிக்கெட்டுகளும் காலியாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
குறிப்பாக காவாலா பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் ரீல்ஸ் செய்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் படம் என்றாலே, ஸ்டைலுக்கும் மாஸ்-க்கும் எந்த ஒரு குறையும் இருக்காது. அது போலவே இப்படத்திலும் ரஜினி ஸ்டாலான லுக்கில் உள்ளதாக தெரிகிறது.
போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் ரஜினிகாந்தின் லுக் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி, லால் சலாம்’ படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ரிலீசுக்காகவும் ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க:
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)