இந்த ஆள கட்டிபோடுங்க டா..சூரிக்கு படிப்பு இல்லை என்ற வாட்டர்மெலன் ஸ்டார்..கடுப்பில் ரசிகர்கள்
இன்ஸ்டாகிராம் பிரபலமான வாட்டர்மெலன் ஸ்டார் நடிகர் சூரியைப் பற்றி பேசியுள்ள கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

சூரி பற்றி வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்
இன்ஸ்டாகிராமின் காமெடியாக நடித்து வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் திவாகர். இவர் ஒரு பிசியோதெரபிஸ்ட் மருத்துவரும் கூட. கஜினி படத்தில் சூர்யா நடித்த வாட்டர்மெலன் காட்சியை நடித்துகாட்டி இவர் வெளியிட்ட வீடியோ வைரலாக அனைத்து யூடியூப் சேனல்களும் இவரை அழைத்து வீடியோ வெளியிட்டு பிரபலமாக்கின. இதனைத் தொடர்ந்து தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்கிற பட்டத்தையும் கொடுத்துக் கொண்டார். இன்ஸ்டாகிராம் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் நடிகர் சூரியைப் பற்றி திவாகர் பேசியுள்ள கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையாகியுள்ளது
சூரிக்கு படிப்பு இல்ல
"எனக்கு இருக்க திறமைக்கு நான் சின்ன ரோல்களில் நடிக்கமாட்டேன். அந்த லெவலில் நான் கிடையாது. நான் பெரிய படிப்பை படித்திருக்கிறேன். சூரி அண்ணாவுக்கு படிப்பு இல்ல. ஆரம்பத்தில் இருந்து பெயிண்ட் அடிப்பது மாதிரியான சின்ன சின்ன ரோல்களில் நடித்து மேலே வந்தார். ஆனால் நான் ஏற்கனவே ஒரு பெரிய வேலையில் இருக்கிறேன். அதை எல்லாம் விட்டுவிட்டு 500 , 1000 பணத்திற்காக நடிக்க போக முடியாது. நல்ல நடிப்பு திறமையை காட்டிட்டேன். கடவுளும் கலைத்தாயும் மக்களும் என்னை அடுத்த லெவலுக்கு கொண்டு போவார்கள்" என வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேசியுள்ளார். சூரியோடு தன்னை ஒப்பிட்டது மட்டுமில்லாமல் சூரிக்கு படிப்பு இல்ல என்று அவரது கருத்திற்கு ரசிகர்கள் கடுப்பாகியுள்ளார்கள். இந்த ஆளை பிடித்து கட்டிவையுங்கடா என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்
சூரி படிக்காதவர் அதனால் 500,1000த்துக்கு நடிச்சார். நான் டாக்டர் 500,1000 க்கு போய் நடிக்க முடியாது. 😳😳🤣🤣🤣
— காக்கா (@Kaka_offic) July 1, 2025
இவன யாராவது கட்டி போடுங்க டா. pic.twitter.com/uGh6G1HkDO
சூரி
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமான சூரி அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். கருடன் படத்தைத் தொடர்ந்து சூரி நடிப்பில் சமீபத்தில் மாமன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது . நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சூரி தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.






















