மேலும் அறிய

Kamal Haasan: “கெட்ட வார்த்தை கவிதை எழுதி இருக்கேன்.. சென்சார் வாரியம் இதை செய்யுங்க” - கமல்ஹாசன்

Kamal Haasan: “இது இந்தியன் படத்துக்கு மட்டுமில்லை, தடுப்பதால் என் பிள்ளைகள் தெருவில் கெட்ட வார்த்தை கேட்காமல் தப்பிக்க மாட்டார்கள். நம்முடைய சுற்றுச்சூழல் தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும்." - கமல்

Kamal Haasan Speech in Indian 2 Press Meet: இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. கமல்ஹாசன் 28 ஆண்டுகளுக்குப் பிறகு சேனாபதி கதாபாத்திரத்தில் இந்தியன் தாத்தாவாக இந்தப் படத்தில் ரீ - எண்ட்ரி தருகிறார். இந்தியன் முதல் பாகமே தமிழ்நாடு தாண்டி இந்திய அளவில் ஹிட் அடித்த நிலையில் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், நடிகர் சித்தார்த் ஆகியோர் கலந்துகொள்ள நடைபெற்றது. 

‘கெட்ட வார்த்தை கவிதை சிறு வயதில் எழுதினேன்’

அப்போது இந்தியன் 2 படத்தின் சென்சார் கட்டில் நீக்கப்பட்ட காட்சிகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார். “நான் சிறுவனாக இருந்தபோது நிறைய கெட்ட வார்த்தை கவிதைகள் எழுதியாக பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு புகார் வந்தது. இதிலிருந்து தப்பிக்கவே முடியாது, என்னை வீட்டை விட்டு துரத்தப் போகிறார்கள் என்ற பயத்தில் நான் இருந்தேன். என் அப்பா வந்து நான் என்ன எழுதி இருக்கிறேன் எனப் பார்த்தார்.

 “தமிழ் சந்தம், தலை, சீர் எல்லாம் சரி இல்லையே” என்றார். பின் “ஒன்று செய், நீ டாக்டருக்கு படி, இதெல்லாம் பாடமாக மாறிவிடும்” என்றார். உறுப்புகள் பெயர் எல்லாம் அதில் இருக்கும், வேறென்ன கெட்ட வார்த்தை? இல்லை ஆண் மக்கள் தாங்கள் செய்ய முடியாத தொழிலை, பெண்கள் செய்யும் பொறாமையில், அதனைப் பற்றி இழிவாகப் பேசுவது தான் கெட்ட வார்த்தை. இவர்களால் செய்ய முடிந்திருந்தால் அது கெட்ட வார்த்தையாகவே மாறி இருக்காது.

சென்சார் வாரியத்துக்கு தூது

நான் சென்சாருக்கு விடுக்கும் தூது இது. ஜெயகாந்தன் மாதிரியாக இருக்கும் ஒரு கலைஞன் தன் கதையை கதாபாத்திரத்தை ஆழமாகப் பதிவு செய்வதற்கு இந்தக் கெட்ட வார்த்தைகள் மிகவும் பயன்படும். இந்தியன் படத்துக்கு மட்டுமில்லை, நான் விடுப்பது இனி எழுதப் போகும் படங்களுக்கு. நல்லதையும் கெட்டதையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்தால் தான் இது உப்பு, இது காரம் என்று தெரியும். நீங்கள் தடுப்பதால் என் பிள்ளைகள் தெருவில் கெட்ட வார்த்தை கேட்காமல் தப்பிக்க மாட்டார்கள். நம்முடைய சுற்றுச்சூழல் தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும். வன்முறையை சந்தோஷமான நிகழ்வாக படங்களில் காட்டாமல், அதை வலிப்பது போல் காட்டினால் வாழ்க்கையில் அவை நிகழாது.. இது ஒரு தூது. அவ்வளவு தான்” எனப் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: Amstrong: ”வடசென்னையின் அரசன் வீழ்த்தப்பட்டார்” - பா.ரஞ்சித் படத்தின் இசையமைப்பாளர் உருக்கம்

Samantha: சமந்தா விமர்சனங்களை ஒதுக்கி, பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார்.. மீண்டும் மருத்துவர் ஃபிலிப்ஸ் காட்டம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
Embed widget