மேலும் அறிய

Kamal Haasan: இந்தியன் 2 பிடிக்கவில்லை... பாயாசத்தை உதாரணம் காட்டி விளக்கமளித்த கமல்ஹாசன்

இந்தியன் 2 படம் தனக்கு பிடிக்கவில்லை என்று உருவான சர்ச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியா , சிங்கப்பூர் , மலேசியா , துபாய் உள்ளிட்ட நாடுகளில் தற்போது இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்கள். 

சர்ச்சையாகிய கமல் பேச்சு

இந்தியன் 2 படம் குறித்து கடந்த சில நாட்கள் முன்பு கமல் பேசுகையில் தனக்கு இந்தியன் 3 படத்தின் கதை ரொம்பவும் பிடித்ததாகவும் அதனால் தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் தெரிவித்திருந்தார். அவர் அப்படி பேசியது சமூக வலைதளங்களில் தவறாக புரிந்துகொள்ளப் பட்டு சர்ச்சையாக மாறியது. இந்தியன் 2 படத்தின் கதை நன்றாக இல்லை என்று அதனால்  கமலுக்கு இந்தியன் 2 படத்தின் கதை பிடிக்கவில்லை என்றும் விருப்பமில்லாமல் தான் அவர் இந்தப் படத்தில் நடித்ததாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. தற்போது இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்

எனக்கு பாயாசம் பிடிக்கிறது என்றால் என்ன பிரச்சனை

கமல் பேசுகையில் “ கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு இயக்குநருடன் வேலை பார்த்து வந்தேன். ஒரே பிரஸ் மீட்டில் டைரக்டர் எனக்கு கால் செய்து என்ன சார் இப்படி பேசிட்டீங்க என்று சொல்லும்படி ஆகிவிட்டது. ஒரு குழந்தையிடம் கேட்காத கேள்வி உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என்று. அவர்கள் இரண்டுபேரும் இல்லை என்றால் குழந்தையே கிடையாது. அதே போல் எனக்கு இந்த ஒரு சீன் பிடித்திருக்கிறது என்று நான் சொன்னால் எனக்கு மற்ற சீன் பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. என்னுடைய நண்பர்களும் திரை விமர்சகர்களும் இதை அப்படி எடுத்துக் கொள்ள கூடாது. எனக்கு இந்தியன் 3 படம் என்று ஒன்று இருப்பது தெரிந்துவிட்டது அதனால் நான் அதன் மேல் ஆர்வமாக இருக்கிறேன். முதலில் சாப்பிட்ட சாம்பார் நன்றாக இருந்தது. ரசமும் நன்றாக தான் இருந்தது. பாயாசத்தை நொக்கி என் மனம் ஓடுகிறது என்றால் அதற்கான என்மீது நீங்கள் கோபிக்கக் கூடாது.” என்று கமல் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
CHN-TRY Flight: சென்னை-திருச்சி விமான பயணிகளுக்கு இனி ஜாலிதான்.. பணம் மிச்சமாகப் போகுது.. எப்படி தெரியுமா.?
சென்னை-திருச்சி விமான பயணிகளுக்கு இனி ஜாலிதான்.. பணம் மிச்சமாகப் போகுது.. எப்படி தெரியுமா.?
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
Embed widget