Chi Chi Chi Song: இந்தியாவே VIBE செய்யும் சீ சீ சீ பாடல்! எத்தனை வருஷத்துக்கு முன்னாடி வந்தது தெரியுமா?
Chi Chi Chi Song: இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ள சீ சீ சீ பாடல் எப்படி உருவானது? எப்போது உருவானது? என்பதை கீழே காணலாம்.

Chi Chi Chi Song: சமூக வலைதள வளர்ச்சிக்குப் பிறகு மொழிகளை கடந்த பல பாடல்கள், நடனங்கள், செயல்பாடுகள் உலகெங்கும் பரவி வருகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டில் முதல் வைரல் பாடலாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது சீ சீ சீ பாடல்.
சீ சீ சீ பாடல்:
இந்திய திரையுலகை இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாக்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆல்பம் பாடல்கள் என்றால் கூட இந்த மொழியிலே வருகிறது. ஆனால், இந்த மொழிகளுடன் ஒப்பிடும்போது குறைவான ரசிகர்களை கொண்ட ஒடிய பாடல் இன்று இந்தியா முழுவதும் ரசிகர்களை வைப் செய்ய வைத்துள்ளது.
ஒடியா மொழியில் உருவாகியுள்ள பாடல் சீ சீ சீ ரே நானி என்ற பாடல். ஆல்பம் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் கடந்த 8ம் தேதி வெளியானது. யூ டியூபில் வெளியாகி இரண்டு வாரத்தில் 67 லட்சம் பார்வையாளர்களை அதாவது 6.7 மில்லியன் கடந்து இன்னும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் வைரல்:
குறிப்பாக, கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராம் முழுவதும் இந்த பாடல் மட்டுமே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால், இந்த பாடல் மேலும் பிரபலமாகியுள்ளது. இந்திய அளவில் ட்ரெண்டிங்காக உள்ள இந்த பாடல் சாதாரண கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டது.
70,80 காலகட்டத்தில் நடப்பது போல இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. காதலியை சேர முடியாமல் தவிக்கும் காதலனின் பரிதவிப்பாக இந்த பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலை எழுதி, பாடி, இசையமைத்தவர் சத்யா அதிகாரி. இந்த பாடலில் பிபூதி பிஸ்வால், ஷைலஜா படேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாடல் உருவானது எப்படி?
இந்த பாடல் கடந்த 1995ம் ஆண்டு எழுதப்பட்டது. ஆனால், இந்த பாடல் 2005ம் ஆண்டுதான் படமாக்கப்பட்டது. இந்த பாடலை படமாக்க 10 ஆண்டுகளுக்கு பிறகே முயற்சி செய்துள்ளனர். இந்த பாடலில் ஒடியாவின் பிரபல நாடக நடிகர் பிபூதி பிஸ்வால் நடித்துள்ளார். இதையடுத்து, மனபஞ்சன் நாயக் இதற்காக திரைக்கதை எழுதி படமாக்கியுள்ளார். இந்த பாடல் 2005ம் ஆண்டு வெளியான போது கிடைத்த வெற்றியை விட தற்போது வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

