ஜனவரி 24-ம் தேதி பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் பெண் குழந்தைகளுக்கு உதவி செய்யும் விதமாக அரசு கொண்டுவந்த முக்கியமான 5 திட்டங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
2014-ல் பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறது.
இத்திட்டம் மக்களிடம் பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்டுவதற்காக பிரதம மந்திரியால் 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கும் அவர்கள் தாயாருக்கும் ரூ.500 உதவித்தொகையாக கொடுக்கப்படும். அத்தோடு 10-ம் வகுப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.300 - ரூ.1000 வரை வழங்கப்படும்.
குடும்பத்தின் ஒரே பெண் குழந்தையாக இருந்து 11 மற்றும் 12ம் வகுப்பில் சேர ஆசைப்பட்டால் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண் குழந்தைகள் பண உதவி பெற்றுக்கொள்ளலாம்.