பணிவா இருக்க மாதிரி நடிப்பாங்க...என்ன நித்யா மேனன் இப்படி சொல்லிட்டார்
தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படத்தில் நடித்துள்ள நித்யா மேனன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தனுஷ் நித்யா மேனன்
திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்தார்கள். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். சினிமா தவிர்த்து தனுஷும் நித்யா மேனனும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நித்யா மேனன் தனுஷை பாராட்டி பேசியுள்ளார். அதே போல் தனுஷ் நித்யா மேனன் பற்றி இப்படி கூறியுள்ளார் " திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனனை ஷோபனா என்கிற ஒரு நல்ல தோழியாக அறிமுகம் செய்தோம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் எனக்கு நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். நித்யா மேனன் தேசிய விருது வென்றது என்னுடைய தனிப்பட்ட வெற்றி" என தனுஷ் குறிப்பிட்டிருந்தார்
தனுஷை தாக்கினாரா நித்யா மேனன்?
இட்லி கடை படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படம் குறித்து நித்யா மேனன் பல தகவல்களை தெரிவித்து வருகிறார். சமீபத்திய நிகழ்ச்சியில் நித்யா மேனன் தெரிவித்துள்ள கருத்து ஒன்று சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது " சில பார்க்க வெளியில் பணிவாக நடந்துகொள்வார்கள் ஆனால் செட்டில் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். " என நித்யா மேனன் சொல்லியிருக்கிறார். அவர் தனுஷை குறிப்பிட்டு தான் இப்படி சொல்வதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
#NithyaMenon Attacked #Dhanush as egoistic shit.
— Veguli (@veguli_) February 7, 2025
Dhanush's first 100cr #Thiruchittrambalam reason Nithya Menon @dhanushkraja
Pichai potturkanga. avanga name ah poster la mention panrathula ennada ego unakku 🤦pic.twitter.com/cWL5iuNMco
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
தனுஷ் இயக்கியுள்ள மற்றொரு படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . ஜீ.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

