அஜித் மற்றும் த்ரிஷா ஜோடி ரசிகர்கள் மத்தியில் இன்றும் எவர்கிரீனாகவே உள்ளது.
அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படும் திரைப்படங்களாக உள்ளன.
2005-ல் லிங்குசாமி இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்தனர். இப்படத்தில் உள்ள ‘டிங் டாங் கோயில் மணி’ பாடல் பிடிக்காத ஆட்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
2007-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடித்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியாக அமைந்தது. இப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஜித் மற்றும் த்ரிஷா காம்போவை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது.
நேற்று (06/02/2025) வெளியான விடாமுயற்சி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்திலும் அஜித் த்ரிஷா காம்போ ரசிகர்களை வென்றுள்ளது.
அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் Good Bad Ugly திரைப்படத்தை ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளனர்.