மேலும் அறிய

அன்றும் இன்றும்... என்றும்... இதயம் முரளிகளின் இதயமான இதயம் வெளியான நாள் இன்று!

Idhayam movie: 31 ஆண்டுகளுக்கு முன் இன்று இதே நாளில்  இதயம் வெளியான போது, கல்லூரி மாணவர்கள் தியேட்டர்களில் தவம் இருந்ததை மறக்க முடியாது. 

‛பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா... குளிர் புன்னகையில் எனை சுட்ட நிலா...’ ஒரு சாப்பாட்டு தட்டை வைத்துக் கொண்டு, ஒரு கல்லூரியின் மேடையில் நின்று கொண்டு, ஒட்டுமொத்த மாணவ கூட்டத்தையும் கட்டுப்படுத்திய பாடல் அல்ல இது. 90களில் காதலுக்காக ஏங்கித் தவித்த, காதலை சொல்ல முடியாமல் ஏங்கித் தவித்த ‛இதயம் முரளிகளின்’ உள்ளக்குமுறல் தான் அந்த பாடல். 

இன்றும் ‛இதயம் முரளி’ என்கிற அடைமொழியோடு சில காதல் ஃபார்முலா நாயகர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்று அவர்களை பாராட்டுவோரும் உண்டு. பயந்தாங்கோலிகள் என்று சாடுபவர்களும் உண்டு. ஏன் இந்த நிலை இதயம் முரளிகளுக்கு?

View this post on Instagram
 
A post shared by கேளடி கண்மணி 🤍🎼 (@psychotic_aesthete)

தன்னம்பிக்கை இல்லாத மருத்துவ மாணவன் ஒருவன்; சக மாணவி ஒருத்தியை காதலிக்கிறான். அவளுக்காக ஏங்குகிறான். இதற்கிடையில் அந்த மாணவி, தன் தங்கையின் காதலிக்கு உதவிவதை, அவன் அவளின் காதல் என்று தவறாக புரிந்து கொள்கிறான். இதற்கிடையில் தங்கையின் காதலுக்கு தந்தை மறுக்க, தங்கை தற்கொலை செய்து செய்து கொள்கிறாள்.

அதுவரை தன் காதலை சொல்லாமல், சொல்ல தைரியமும் இல்லாமல் சுற்றித்திரிந்த மருத்துவ மாணவன், தன் காதலி யாரையும் காதலிக்கவில்லை என்கிற உண்மை தெரிந்து, அவளிடம் தயங்கி தயங்கி தன் காதலை கூறுகிறான். அதுவும் கல்லூரியின் கடைசி நாளில். தங்கை இறந்த சோகத்தில் இருக்கும் அந்த மாணவி, மாணவன் சொன்ன காதலை காது கொடுத்து கேட்கவில்லை. பின்னர் அதை அவள் தாமதமாக அறிந்து கொள்கிறாள். இந்நிலையில், தன் காதலை சொல்லாமல் பொத்தி வைத்து பொத்தி வைத்து, இதய நோய்க்கு ஆளாகிறான் மாணவன். 

சிகிச்சை முடிந்து ரயிலுக்காக அவன் ஊர் திரும்பும் போது, தன் தந்தை ஒப்புதலோடு, அவனிடம் காதலை சொல்ல வருகிறாள் அந்த மாணவி. அப்போது, அவளை தடுக்கும் மாணவனின் நண்பன், ‛அவனுக்கு சந்தோஷத்தையும் துக்கத்தையும் தாங்கும் சக்தி இப்போது இல்லை’ என்று கூறி தடுத்துவிடுகிறான். அத்தோடு, அங்கிருந்து ரயில் புறப்பட, அதை பார்த்தபடி நிற்கிறாள் காதலி. 

View this post on Instagram
 
A post shared by த மி ழ் (@tamizh___2105)

இது தான் இதயம் படத்தின் கதை. 1991 செப்டம்பர் 6 ம் தேதி இதே நாளில் வெளியான இத்திரைப்படத்தை, காதலர் தினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கதிர் இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசையும், அப்துல் ராஹ்மானின் ஒளிப்பதிவும், இதயத்துடிப்பை நமக்கு உணர வைத்திருக்கும். பிரபல சத்யஜோதி ப்லிம்ஸ் தயாரித்த இதயம் திரைப்படம், பெரிய அளவில் வசூலையும், வெற்றியையும் பெற்றது. அதுமட்டுமல்லாது, இதயம் முரளி என்கிற கதாபாத்திரத்தை வாழ்வியலோடு இணைத்தது. 

முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த், ராஜகோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம், துள்ளல், காதல், சோகம், வலி என பல உணர்வுகளோடு பயணித்து, ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்த படம். 31 ஆண்டுகளுக்கு முன் இன்று இதே நாளில்  இதயம் வெளியான போது, கல்லூரி மாணவர்கள் தியேட்டர்களில் தவம் இருந்ததை மறக்க முடியாது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget