Hugh Jackman: விவாகரத்து சீசன் முடியலை..! 27 வருட திருமண உறவை முறித்த ஹுக் ஜாக்மேன், காரணம் என்ன?
Hugh Jackman Divorce: மர்வெல் திரைப்படங்கள் மூலம் உலகளவில் பிரபலமான, ஹுக் ஜாக்மேன் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதாக அறிவித்துள்ளார்.

Hugh Jackman Divorce: ஹுக் ஜாக்மேன் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து, மனைவி டெபோரா உடனான 27 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது.
ஹுக் ஜாக்மேன் விவாகரத்து:
மார்வெல் காமிக்ஸ் அடிப்படையிலான எக்ஸ்-மேன் திரைப்படங்களில், வொல்வரின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் ஹுக் ஜாக்மேன் பிரபலமாகியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான டெட்-பூல் அண்ட் வொல்வரின் படத்திலும் இவர் நடித்து இருந்தார். இந்நிலையில் தான, மனஒவி டெபோரா உடனான 27 ஆண்டுகால திருமண உறவை முறித்துக்கொள்வதாகவும், அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு முதலே இந்த தம்பதி பிரிந்து வாழ்ந்து வருவதாக, விவாகரத்து கோரிய மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிரிந்தது ஏன்?
56 வயதான ஜாக்மேனும் 69 வயதான டெபோராவும், செப்டம்பர் 2023 இல் ஒரு கூட்டு அறிக்கையில் தங்கள் பிரிவை அறிவித்தனர். அதில், "எங்கள் பயணம் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது, எங்கள் தனிப்பட்ட வளர்ச்சியைத் தொடர நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொடரின் தொகுப்பில் சந்தித்த பிறகு 1996 இல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, சவாலான நேரத்தில் குடும்பம்தான் அவர்களின் "மிக உயர்ந்த முன்னுரிமை" என்பதைக் குறிப்பிட்டு, "எங்கள் குடும்பம் எங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் இந்த மாற்றத்தை வழிநடத்தும்போது எங்கள் தனியுரிமையை மதிப்பதில் உங்கள் புரிதலை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்" என்று விளக்கினர்.
ஜாக்மேன் புதிய காதல்:
ஜேக்மேன் தனது பிராட்வே படத்தில் சேர்ந்த நடித்த சட்டன் ஃபாஸ்டருடனான தனது காதலை பொதுமக்களுக்கு அண்மையில் வெளிப்படுத்தினார். அதேநேரம் ஜாக்மேனிடமிருந்து பிரிந்ததிலிருந்து, டெபோரா தனது வாழ்க்கையை பல்வேறு பிரிவுகளில் முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார். திரைத்துறையினர் விவாகரத்து பெறுவது என்பது சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவிலேயே தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜெயம் ரவி என பிரபல நட்சத்திரங்களும், தங்களது நீண்ட கால திருமண உறவை முறித்துக்கொண்டு உள்ளனர். ஹாலிவுட்டில் இந்த கலாச்சாரம் மிகவும் வழக்கமானது என்றாலும், சர்வதேச அளவில் பிரபலமான ஹுக் ஜாக்மேனின் விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதனிடையே, மார்வெல் நிறுவனம் தரப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் அடுத்த அவெஞ்சர்ஸ் படமான, டூம்ஸ்டேவிலும் ஹுக் ஜாக்மேன் வொல்வரின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.





















