Vikram Vedha Hindi Remake: விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து விலகும் ஹிருத்திக் ரோஷன்
விக்ரம் வேதா ரீமேகில் இருந்து நடிகர் அமீர் கான் முதலில் விலகினார் , தற்பொழுது ஹிருத்திக் ரோஷனும் படத்தில் இருந்து விலகியுள்ளார் .
தமிழில் 2017ல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம் விக்ரம் வேதா தற்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது . இப்படத்தில் முதலில் சைஃப் அலி கான் மாதவன் கதாபாத்திரத்திற்கு மற்றும் அமீர் கான் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தனர் . திடீர் என்று படத்தை விட்டு அமீர் கான் விலகியுள்ளார் . அமீர் கான் விலகியதற்கான எந்த காரணமும் தெரியவில்லை . பின்பு அமீர் கான் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டார் .
பொதுவாக நடிகர் அமீர் கானுக்கு சீனாவில் ரசிகர்கள் அதிகம். தங்கள் படத்திற்கு பின்பு ஆசியா திரைப்பட மார்க்கெட்டில் அமீர் கானிற்கு ரசிகர்கள் அதிகமாக தொடங்கியது. இப்படத்தின் காட்சிகளை ஹாங்காங் பின்னணியில் எடுக்கலாம் என்று முடிவு செய்து கதைகளும் அதற்கு ஏற்றார் போல் மாற்றம் செய்யப்பட்டது .
கொரோனா தோற்று மற்றும் இந்தியா சீனாவிற்கான பிரச்னைகள் தொடர்ந்து வந்ததால் இப்படத்தின் ஷூட்டிங் அங்கு எடுக்க இயலாது என்று அமீர் கான் இந்தப் படத்தில் இருந்து விலகினார். பின்னர் அமீர் கானின் வாய்ப்பு ஹிருத்திக் ரோஷனிற்கு வழங்கப்பட்டது .
இந்நிலையில் ,தற்பொழுது ஹிருத்திக் ரோஷனும் படத்தில் இருந்து விலகியதாக தெரிகிறது . படத்தின் முன்கட்ட வேலைககள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது .கொரோனா அலை சற்று கம்மியாகும் பொழுது படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் நடிகர் ஹிருத்திக் ரோஷன், கொரோனா பரவல் குறைந்ததும் பைட்டர், கிரிஷ் 4 மற்றும் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் தொடரில் நடிக்க இருப்பதால் . விக்ரம் வேதா ரீமேக்கிற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால், அவர் இப்படத்தில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை யார் செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது . இன்னும் படம் தொடங்காத நிலையில் இரண்டு நாயகர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் .நீரஜ் பாண்டே இந்த படத்தை தயாரிக்கிறார் .காயத்ரி புஷ்கர் இந்தப் படத்தை ஹிந்தியிலும் இயக்குகிறார்கள்