Hanuman OTT Release: ஓடிடியில் தமிழில் வெளியாகும் ஹனுமான் திரைப்படம்.. எந்தத் தளம், தேதி தெரியுமா?
சூப்பர்ஹீரோ திரைப்படமான ஹனுமான் வரும் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாக உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஓடிடி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹனுமான்' படத்தின் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளை ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீமாக உள்ளது.
அதிரடி ஆக்சன், பொழுதுபோக்குடன் பக்தியும் கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா உடைய சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும்.
கற்பனை கிராமத்தில் சூப்பர் ஹீரோ
'ஹனுமான்' படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹனுமந்து எனும் சூட்டிகையான இளைஞன், ஹனுமனின் அருளைப் பெற்று சூப்பர் ஹீரோவாக எப்படி மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் மைய கதைக்களம்.
அஞ்சனாத்ரி என்ற கற்பனைக் கிராமத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மூலம் தனது சக்தியைப் பெறும் சூப்பர் ஹீரோவான மைக்கேலை, ஹனுமந்து எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பற்றியது தான் இப்படம்.
தமிழில் ஸ்ட்ரீம் ஆகும் ஹனுமான்
தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வரலக்ஷ்மி சரத்குமார், சமுத்திரக்கனி, வினய் ராய் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஹனுமான் படத்திற்கான இசையமைப்பை கௌரா ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை கௌரா ஹரி செய்துள்ளார். படத்திற்கு தாசரதி சிவேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தெலுங்கில் வெளியாகி சில மாதங்களுக்கு முன் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்ற ஹனுமான் திரைப்படத்தை, வரும் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளிக்கலாம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும். இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் டிஸ்னி ஹாட்ஸ்டார் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: VJ Adams: அட.. சன் மியூசிக் தொகுப்பாளர் ஆடம்ஸ நியாபகம் இருக்கா.. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இதுதான்!
Hotspot: படம் பிடிக்கலனா செருப்பால் அடிங்க.. ஹாட்ஸ்பாட் பட இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் வேதனை!