Good Bad Ugly: "உங்கள் அர்ப்பணிப்பை கண்டு வியக்கிறேன்" - நடிகர் அஜித்தைப் பாராட்டிய இயக்குனர் ஆதிக்!
குட் பேட் அக்லியின் பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் அர்ப்பணிப்பை கண்டு வியப்பதாக பாராட்டியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
அஜித்தை பாராட்டிய ஆதிக்:
அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில், தற்போது நடிகர் அஜித்தைப் பாராட்டி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குட் பேட் அக்லி படத்திற்காக உங்களது அர்ப்பணிப்பும், ஈடுபாடும் வியக்க வைக்கிறது. எப்போதும் எனது நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. குட் பேட் அக்லி படமானது காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
குட் பேட் அக்லி:
விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் ஏதும் பெரியளவில் வெளியாகவில்லை என்றாலும், குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் இதர கலைஞர்கள் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நேர்கொண்ட பார்வை படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அப்போது நடிகர் அஜித்திற்கு நெருக்கமான ஒருவராக மாறினார். அப்போது, ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சில அறிவுரைகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அவரது அறிவுரைக்கு பிறகு அவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் கடந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதன்பின்பு, அவர் சிம்புவை வைத்து இயக்கிய அன்பானவன், அசராதவன் மற்றும் அடங்காதவன் படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதன்பின்பு, மார்க் ஆண்டனி படம் மூலமாக அவர் வெற்றி இயக்குனராக திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Diwali Release: விடாமுயற்சி முதல் விடுதலை 2 வரை.... தீபாவளி ரேஸில் போட்டிப்போடும் படங்கள்: லிஸ்ட் இதோ
மேலும் படிக்க: Premji Amaren: சேலத்து மணமகள்.. கைகூடிய காதல்.. பிரேம்ஜியின் வருங்கால மனைவி பற்றிய தகவல்கள்!