மேலும் அறிய

Muthiah Muralitharan: விஜய் சேதுபதி விலகிய “800” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு .. ஹீரோ யார் தெரியுமா?

முன்னாள் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

முன்னாள் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

சர்ச்சைகளில் சிக்கிய படம் 

கடந்த 2020 ஆம் ஆண்டு மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர்  எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் முன்னாள் இலங்கை அணியின்  சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களும் வெளியாகியது. முரளிதரனின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதை குறிப்பிடும் வகையில் இந்த படத்திற்கு “800” என பெயரிடப்பட்டது. 

தமிழில் எடுக்கப்படும் இப்படத்தை இந்தி, வங்காளம், சிங்களம் என டப்பிங் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.  தொடர் சர்ச்சைகள் காரணமாக முரளிதரனே விஜய் சேதுபதியை இந்த படத்தில் விலகி கொள்ளுமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பான பதிவை குறிப்பிட்டு “நன்றி வணக்கம்” என விஜய் சேதுபதி பதில் தெரிவித்திருந்தார். 

பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் 800 படம் குறித்து கேள்வியெழுப்பப்பட, அதற்கு “நன்றி வணக்கம்” என சொன்னவுடனே அது முடிந்துவிட்டது என்று அர்த்தம். இனி அதைப்பற்றி பேச ஒன்றும் இல்லை 
 என விளக்கமளித்தார். இதனால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. 

மீண்டும் வந்த “800” 

இதனிடையே இன்று முத்தையா முரளிதரன் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு  அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படமான '800' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும்,  ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி, தற்போது '800' படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார்.

இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், ஜிப்ரான் இசையமைப்பாளராகவும், பிரவீன் கே.எல். எடிட்டராகவும் பணியாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: 19 Years of Gilli: ஆல் ஏரியாவுல நம்ப கில்லிடா...! ரீமேக் படத்திற்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Embed widget