மேலும் அறிய

19 Years of Gilli: ஆல் ஏரியாவுல நம்ப கில்லிடா...! ரீமேக் படத்திற்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதோடு, அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் நிலை நிறுத்திய கில்லி படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகளை கடந்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதோடு, அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் நிலை நிறுத்திய கில்லி படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகளை கடந்துள்ளது. நாம் இந்த கட்டுரையில் கில்லி படம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை காணலாம். 

தெலுங்கில் மகேஷ்பாபு, பூமிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்த ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி படம் என்றாலும் தமிழில் தரமான கமர்ஷியல் படமாக உருவாக்கி இருப்பார் இயக்குனர் தரணி. குறிப்பாக இந்த படத்திற்கு முன்னால் விஜய் நடித்த திருமலை படம் வெளியாகி அவருக்கு ஆக்ஷன் ஹீரோவுக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது. அதனை சரியாக பின்பற்றி வெளியான கில்லி படம் விஜய்யின் கேரியரில் மாஸ் ஹிட் கொடுத்தது என்றே சொல்லலாம். 

மறக்க முடியாத கேரக்டர்கள்

சென்னையில் கண்டிப்பு மிக்க தந்தையாக ஆஷிஷ் வித்யார்த்தி, அப்பாவி அம்மாவாக ஜானகி சபேஷ், சுட்டித்தனமான தங்கையாக ஜெனிபர் என அழகான குடும்பம் ஒரு பக்கம், மறுபுறம் மதுரையில் வில்லன் பிரகாஷ்ராஜிடம் மாட்டிக் கொள்ளும் திரிஷா ஒரு பக்கம் என சுமூகமாக கதை சென்று கொண்டிருக்கும். மதுரைக்கு கபடி விளையாட செல்லும் விஜய், த்ரிஷாவை பிரகாஷ் ராஜிடம் காப்பாற்றும் காட்சிகளில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி வரை  என எல்லா ஏரியாவிலும் சொல்லி அடித்தது கில்லி. 

19 Years of Gilli: ஆல் ஏரியாவுல நம்ப கில்லிடா...!  ரீமேக் படத்திற்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தெரியுமா?

கில்லி படம் உருவான கதை

ஒக்கடு படத்தின் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி வைத்திருந்த நிலையில்  தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் நடிகர் விஜய் தரணி இந்த படத்தை இயக்குவாரா என கேட்டுள்ளார்.  அதற்கு முந்தைய நாள் தான் தரணி ஒக்கடு படத்தைப் பார்த்துள்ளார். மேலும் தூள் படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்துள்ளார். 

இதற்கிடையில் சரியாக மறுநாள் ஏ.எம்.ரத்னம் தரணியிடம் ஒக்கடு படம் ரீமேக் இயக்குவது பற்றி கேட்டுள்ளார்.  சரி என ஒப்புக்கொண்ட தரணி, பின் ஒரு வாரம் டைம் கேட்டுள்ளார். எதற்கு என கேள்வியெழுப்பட, நான் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிய ஊருக்கெல்லாம் சென்று பார்க்க வேண்டும் என சொல்லியுள்ளார். மேலும் ஒக்கடு படத்தின் இயக்குநரையும் சந்தித்து பேச வேண்டும். அவர் ஒரிஜினல் படத்தில் செய்ய நினைத்து முடியாத விஷயங்கள் என்ன என்பது எனக்கு தெரிய வேண்டும். மக்கள் முழுவதுமாக இந்த படத்தை ரசித்தார்களா அல்லது ஏதேனும் குறை இருந்ததா என்பது கேட்டு தெரிந்து கொண்டால் அதை இந்த சரி செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு தான் இந்த படத்தை செய்ய ஒப்புக் கொண்டேன். 

அதேசமயம் ஒக்கடு படத்தில் இரண்டாம் பாதி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிய வந்துள்ளது.

கில்லி படத்துக்கு முன்னால் நடந்த சம்பவங்கள்

கில்லி படத்திற்கு முன்னால் இயக்குனர் தரணியிடம் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு கதை தயாராக இருந்துள்ளது. காரணம் அப்போது தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து பெரிய அளவில் படங்கள் வந்தது இல்லை என்பதால் இதனை அவர் கையில் எடுக்க முடிவு செய்திருந்தார்.  அதன் பிறகு கலங்கரை விளக்கத்தில் ஒரு காதல் ஜோடி இருந்தால் எப்படி இருக்கும் என்றும், அதேபோல் சேஸிங் காட்சிகளை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.  இப்படி 3 தனித்தனியாக எண்ணத்திலிருந்த கதையை மொத்தமாக கில்லி படத்தில் அப்ளை செய்ய முடிந்து அதில் தரணி வெற்றியும் பெற்றார்.

ஒக்கடு படத்தின் கதையில் இருந்து  சில சில மாற்றங்கள் செய்து கதை சொல்வதற்காக விஜய்யை சந்திக்க சென்றிருந்தார் தரணி. இது ரீமேக் படம் தானே என விஜய் கேட்க, ஆனால் ஒரிஜினல் படத்திலிருந்து சில காட்சிகளை மாற்றம் செய்து சொல்ல வந்திருக்கிறேன். ஓகே என்றால் படம் பண்ணலாம். இல்லையென்றால் வேறு இயக்குநரை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி முழுக்கத்தையும் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்ட பிறகு இந்த படத்தில் நடிக்கிறேன் என விஜய் சொல்லி இருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget