கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள்
இந்த வாரம் சிவகார்த்திகேயனின் மாவீரன், ஆக்ஷனில் கலக்கும் மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளது.
இந்த வாரம் சிவகார்த்திகேயனின் மாவீரன், ஆக்ஷனில் கலக்கும் மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளது.
மண்டேலா படத்தை இயக்கி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள மாவீரன் வரும் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், மாவீரனில் ஒரு காமிக் ஆர்டிஸ்டாக நடித்து இருப்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு தனது நடிப்பு முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ராஜ் மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பாபா ப்ளாக் ஷீப் படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. ஆர்.ஜே. விக்னேஷ் காந்த், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நித்யானந்தம் இயக்கி இருக்கும் ‘நேற்று நான், இன்று நீ’ படமும் வரும் 14-ம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் ஆதித், வினிதா, அரவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆதிரடி ஆக்ஷன் படமான மிஷன் இம்பாசிபிள். ஹாலிவுட்டில் ஆக்ஷன் படங்களின் பட்டியலில் எப்பொழுதும் இடம்பெற்றிருக்கும் ’மிஷன்:இம்பாசிபிள்’படத்தின் 7வது பாகங்களாக வெளியாகிறது. இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது. அண்மையில் மிஷன் இம்பாசிபிள் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட நடிகர் டாம் க்ரூஸ், ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
மிஷன் இம்பாசிபிள் அதிரடி சாகசங்களுக்காகவும், மோட்டர்பைக் ஜம்ப்பிங் ஸ்டண்டுகளுக்காவும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தது. 7வது பாகத்தில் உலகை அழிக்கும் பயங்கரமான் ஆயுதம் கெட்டவர்களின் கையில் கிடைக்காமல் அதை தடுப்பதும், உலகத்தை அழிக்க உருவாகும் ஆபத்தை தடுப்பதும் கதைக்களமாக உள்ளது என படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.