என்னடா ரீல்ஸ் எடுத்து வச்சிருக்கீங்க...குட் பேட் அக்லி பார்த்து உச்சகட்ட ஏமாற்றத்தில் ரசிகர்கள்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வரும் கண்டெண்ட்களை படத்தில் வைத்து ஓவர் கிரிஞ்சு செய்துள்ளதாக குட் பேட் அக்லி படத்தால் ஏமாற்றமடைந்துள்ளார்கள் ரசிகர்கள்

குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் இது. அஜித்தின் கரியரில் இதுவரை கண்டிராத அளவு இப்படம் டிக்கெட் முன்பதிகளில் வசூல் ஈட்டியுள்ளது.
குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையெ தெரிவித்துள்ளார்கள். அஜித் ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்கில் கொண்டாடி வரும் நிலையில் பொதுவான ரசிகர்களை படம் பெரிதாக திருபதிபடுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். படம் முழுவதும் அஜித் பழைய படங்களின் வசனங்கள் , ஸ்லோ மோஷனில் நடந்து வருவது , சண்டைக்காட்சி என கதைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாததாக பலர் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக படத்தில் இன்றைய ட்ரெண்ட்க்கு ஏற்றபடி சில காட்சிகளையும் வைத்துள்ளது ரசிகர்களுக்கு உச்சகட்ட ஏமாற்றத்தை கொடுத்துள்ளது
கிரிஞ்சு காட்சிகள் கடுப்பான ரசிகர்கள்
மார்க் ஆண்டனி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இளையராஜா பாடல்களை பயன்படுத்தி இருந்த விதம் ரசிகர்களை கவர்ந்தது. அதையே இந்த படத்தில் கொஞ்சம் ஓவராக பயன்படுத்தி சலிக்க வைத்துள்ளார் ஆதிக். குறிப்பாக வில்லன் அர்ஜூன் தாஸ் பழைய பாடல்களுக்கு நடனமாடும் காட்சிகள் பெரிதாக வர்க் அவுட் ஆகவில்லை. இது இல்லாமல் இன்ஸ்டாகிராமில் சில மாதங்கள் முன்பு வைரலான சீ சீ பாடலையும் படத்தில் பயண்படுத்தியுள்ளார்கள். இதனால் ரசிகர்கள் ' என்னடா படமெடுக்க சொன்னா ரீல்ஸ் பண்ணி வச்சிருக்கீங்க' என கொந்தளித்துள்ளார்கள்.
முதல் வாரம் படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் படம் ஃபேமிலி ஆடியன்ஸிடம் போய் சேருமா என்பது கேள்வியாக உள்ளது. அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் பெரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
குட் பேட் அக்லி வசூல்
வசூல் ரீதியாக குட் பேட் அக்லி தமிழ்நாட்டில் 25 முதல் 30 கோடி வரையும் ஒட்டுமொத்தமாக 70 கோடி வரையும் வசூலிக்கும் என சினிமா ஆர்வலர்கள் கனித்துள்ளார்கள்.

