சென்னையில் Wonderla தீம் பார்க் திறப்பு விழா எப்போது ?
ஒரு நாள் முழுவதும் பொழுதுபோக்காக செலவழிக்க வேண்டும், அதுவும் பாதுகாப்பாகவும் பல்வேறு திரில்லிங் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை, பொழுதுபோக்கு பூங்காக்கள் கொடுத்து வருகின்றன.
முன்னணி தீம் பார்க் நிறுவனமாக, வொண்டர்லா (Wonderla Amusement Park) தீம் பார்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் தனது 5-வது கிளையை தமிழ்நாட்டில் வொண்டர்லா நிறுவனம் தொடங்க உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில், உள்ள திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில்
10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைய உள்ளது. இந்த பொழுதுபோக்கு பூங்கா 62 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது.
இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.
லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது.
ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு, 80 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.