Akhanda 2: பாலையாவுக்கு அவமானம்.. அகண்டா 2 ஒத்திவைப்பு திட்டமிட்ட சதியா?
கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் மிக பிரமாண்டமாக வெளியான படம் “அகண்டா”. இப்படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அகண்டா 2 படம் திடீரென ரிலீசாகாமல் ஒத்திவைக்கப்பட்டதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அகண்டா 2 படம்
கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் மிக பிரமாண்டமாக வெளியான படம் “அகண்டா”. இப்படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்த நிலையில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில் இரட்டை வேடங்களில் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்த நிலையில் அகண்டா 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக நந்தமுரி பாலகிருஷ்ணா சென்னை வந்திருந்து தமிழில் பேசி அனைவரையும் வியக்க வைத்தார். மேலும் அகண்டா 2 படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
திடீரென ஒத்திவைக்கப்பட்ட ரிலீஸ்
இந்த நிலையில் அகண்டா 2 படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் டிசம்பர் 4ம் தேதி படத்தின் ப்ரீமியர் ஷோ நடைபெறும் என கூறப்பட்டு அதற்கு டிக்கெட் கட்டணமாக ரூ.600 நிர்ணயிக்கப்பட்டது. ரசிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு இதனைப் பெற்றனர். இந்த நிலையில் தொழில் நுட்ப கோளாறால் ப்ரீமியர் காட்சி நடைபெறாது என கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். சரி காலையில் முதல் காட்சியாவது பார்க்கலாம் என காத்திருந்தவர்களுக்கு அடுத்த அடி விழுந்தது.
தவிர்க்க முடியாத காரணங்களால் பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல படங்கள் சொன்ன தேதியில் ரிலீசாகாமல் இருந்துள்ளது. கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி நீதிமன்ற உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலகிருஷ்ணா போற ஒரு உச்ச நட்சத்திரம் நடித்த படம் ரிலீசுக்கு சில மணி நேரம் முன்பு ஒத்திவைக்கப்பட்டது பாலகிருஷ்ணாவுக்கு இழைந்த அநீதி, அவருக்கு நேர்ந்த அவமானம் என அவரது ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
இப்படத்தை 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அது முந்தைய பட தயாரிப்புகள் காரணமாக ஈரோஸ் நிறுவனத்துக்கு ரூ. 28 கோடி செலுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஈரோஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி வெளியீட்டிற்கு தடை பெற்றது. அதனால்தான் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அகண்டா 2 ரிலீஸ் தள்ளிப்போனதற்கு பலரும் பல காரணங்களை தெரிவிக்கிறார்கள். அவை அடிப்படை ஆதாரமற்றவை. இந்த படத்தின் ரிலீசுக்காக பலரும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். விரைவில் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அகண்டா 2 வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.





















